150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா!
கோயம்புத்தூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 150 கட்சிகளுடன் தனது கட்சியை கூட்டணி வைத்திருக்கிறார் என்று, சீமான் விமர்சித்திருக்கிறார். தவெக தனித்து தேர்தலை எதிர்கொண்டிருக்கும் நிலையில், சீமானின் இந்த விமர்சனம் கவனம் பெற்றிருக்கிறது.
திமுகவும், பாஜகவும் எங்களுக்கு எதிரிதான் என்று பேசியிருந்த விஜய், சட்டமன்ற தேர்தலை தனித்து எதிர்கொண்டிருக்கிறார். இந்நிலையில், சீமானின் விமர்சனம் சோஷியல் மீடியாக்களில் கவனம் பெற்றிருக்கிறது.

என்ன சொன்னார் சீமான்?
கோயம்புத்தூரின் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்றிரவு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் பேசியதாவது, "தைரியம் இருந்தால் ஒரு தொகுதியில் மட்டும் நிற்க வேண்டும். நான் தனித்து ஒரு தொகுதியில் மட்டும்தான் நிற்கிறேன். நான் இந்த மக்களையும், என் இனத்தையும் நம்பியிருக்கிறேன். தோற்றாலும் கவலையில்லை. ஏனெனில், நான் தோற்பது என் மக்களிடத்தில்தான்.
யாருக்கெல்லாம் சீட்
ஆனால், தம்பி விஜய் தன்னை கதாநாயகன் என்று அழைத்துக்கொள்கிறார். ஆனால், 150 பேரை ஒட்டுப்போட்டு சட்டடை தைத்ததை போல, 10 வீடுகளில் கையேந்தி சாப்பாட்டை பெற்று கூட்டாஞ்சோறு ஆக்கினதை போல.. லெட்டர் பேட் கட்சிக்காரனையெல்லாம் கூப்பிட்டு சீட் கொடுத்திருக்கிறார். மற்ற கட்சிகளில் சீட் கொடுக்காதவர்களை அழைத்து வந்து, தனது கட்சியில் நிற்க வைக்க சீட் கொடுத்திருக்கிறார்.
150 கட்சிகளுடன் கூட்டணி
ஆனால் கேட்டால் நான் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை என்று சொல்கிறார். உண்மையில் அவர்தான் 150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கிறார். ஐயா ஸ்டாலினின் கட்சி 22, ஐயா எடப்பாடியின் கட்சி 10 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருப்பதை போல, விஜய் 150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கிறார். மக்களே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும், எப்போதும் ஒரு தலைவன் தனது மக்களை முழுமையாக நம்ப வேண்டும். நாங்கள் நம்பி மக்களுடன் நிற்கிறோம்.
எங்களை இதற்கு மேலும் யாரும் தோற்கடிக்க முடியாது. அவ்வளவு தூரம் நாங்கள் தோல்வியடைந்திருக்கிறோம். இருப்பினும் தோற்று போனவர்களாக நாங்கள் உங்கள் முன்பு நிற்கவில்லை. நிமிர்ந்து நிற்கிறோம்" என்று பேசியிருக்கிறார்.
-
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
சிரிக்க கூட முடியாத அளவிற்கு.. அப்செட்டான விஜய்.. மனசை குடையும் 2 விஷயங்கள்! என்ன நடந்தது? -
"வாழ்க்கை என்பது ஆரம்பத்தில் கண்ட கனவை விட".. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சமந்தா பதிவு -
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
இனி கோவில்களில் உள்ள கடைகளில் அதிக விலைக்கு விற்றால் அபராதம், உரிமம் ரத்து.. அறநிலையத்துறை அதிரடி! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. ஸ்டாலினுக்கு செக்.. எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம்.. ஆதவ்வின் மெகா மூவ்! -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக











Click it and Unblock the Notifications