"இது என்னோட தொழில் இல்லை".. பொளந்து கட்டிய கமல்.. விடாமல் விளாசும் வானதி.. இப்பவே இவ்வளவு மோதலா!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், கமல்ஹாசன் இருவரும் போட்டியிடும் நிலையில் இவர்களுக்கு இடையில் கடுமையான வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    கோவை: மே-2க்குப் பின் கமல் நடிக்கச் சென்று விடுவார்... பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசன் பேட்டி!

    தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக அதன் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இங்கு காங்கிரஸ் சார்பாக மயூரா ஜெயக்குமார் போட்டியிட உள்ளார்.

    இந்த நிலையில் கோவை தெற்கின் பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் களமிறங்குகிறார். இதற்கான அறிவிப்பு நேற்றுதான் வெளியானது. இதனால் இங்கு கடும் போட்டி நிலவுகிறது.

    ஸ்டார்

    ஸ்டார்

    மூன்று வேட்பாளர்களில் இரண்டு பேர் ஸ்டார் வேட்பாளர்கள் என்பதால் கோவை தெற்கு தொகுதி அதிக முக்கியத்துவம் பெறுகிறது . இங்கு பாஜக வலுவாக இருப்பதால் வானதி சீனிவாசனுக்கு நல்ல வாய்ப்புள்ளது . அதே சமயம் மக்கள் நீதி மய்யம் கடந்த லோக்சபா தேர்தலில் இங்கு நல்ல வாக்கு வங்கியை பெற்றது.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    இதனால் கமல்ஹாசனுக்கும் இங்கு சிறப்பான வெற்றி வாய்ப்பு உள்ளது. முன்னதாக லோக்சபா தேர்தலில் இங்கு திமுக கூட்டணி வென்றதால் சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணி ஷாக் கொடுக்க வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக கோவை தெற்கில் கடும் போட்டி நிலவி வருகிறது . இப்படிப்பட்ட நிலையில்தான் வானதி சீனிவாசன், கமல்ஹாசன் இடையில் கடுமையான வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.

    வார்த்தை போர்

    வார்த்தை போர்

    இன்று கோவையில் பேசிய வானதி சீனிவாசன், கோவை எப்போதும் பாஜகவின் கோட்டை. இந்த பகுதி மக்களுக்கு நான் நிறைய நலத்திட்டங்களை செய்து இருக்கிறேன். நான் எம்எல்ஏவாக இல்லாமலே பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். இங்கு 100% பாஜகதான் வெல்ல போகிறது.

    சினிமா

    சினிமா

    கோவை தெற்கில் கமல்ஹாசனுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை. டி.வி ஸ்கிரின்ல வந்து விட்டால் மக்கள் ஏமாந்து வாக்களிக்க மாட்டார்கள். இதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். சினிமா பிரபலங்கள் எப்போது அரசியலில் வெல்வார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது.

    பிக்பாஸ்

    பிக்பாஸ்

    அரசியல் முடிந்ததும் கமல்ஹாசன் பிக்பாஸ் ஷூட்டிங்கிற்கு செல்ல வேண்டியதுதான். இல்லையென்றால் அவர் படம் ஒன்று நடிக்கலாம். ஆனால் அவர் கோவை தெற்கு தொகுதியிலோ, அரசியலிலோ ஜெயிக்க முடியாது என்று வானதி சீனிவாசன் விமர்சனம் வைத்துள்ளார். இதற்கு கமல்ஹாசனும் அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

    கமல்ஹாசன் பதில்

    கமல்ஹாசன் பதில்

    கமல்ஹாசன் தனது பதிலில், தேர்தலில் போட்டியிடும் டாக்டர் தேர்தலுக்கு பின் டாக்டர் பணியை செய்வார். தேர்தலில் போட்டியிடும் வக்கீல் தேர்தலுக்கு பின் வக்கீல் பணியை செய்வார். அதேபோல் சினிமா நட்சத்திரங்கள் தேர்தலுக்கு பின் சினிமா பணியை செய்வார்கள்.

    சினிமா

    சினிமா

    சினிமா எங்கள் தொழில். அதனால் அதை செய்வோம். ஆனால் அரசியல் எங்கள் கடமை. அதை விட்டுத்தர மாட்டோம். அது தொழில் இல்லை, என்று கமல்ஹாசன் மிகவும் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். மற்ற தொகுதிகளில் தேர்தல் களம் சூடாகும் முன்பே கோவை தெற்கு தொகுதி சூடாகி உள்ளது. இரண்டு ஸ்டார் வேட்பாளர்களின் வார்த்தை போரால் பொறி பறக்க தொடங்கி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+