எங்களுக்கு அதிகாரம் இல்லைங்க.. வானதி சீனிவாசன் சொன்னதை பாருங்க! டோட்டல் பாஜகவும் ‘கப் சிப்’ மோடு!
கோவை: அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும் என்றும், இதுதொடர்பாக கருத்து சொல்ல எங்களுக்கு அதிகாரமில்லை என்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக உடன் இனி கூட்டணி இல்லை என்று அதிமுகவினர் முடிவெடுத்தனர். இது தொடர்பான தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்மொழிந்தார். அதனை ஏற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஏகமனதாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றினர்.

2024 மக்களவைத் தேர்தலில் மட்டுமல்ல, 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்ற முடிவை எட்டியுள்ளது அதிமுக. இதையடுத்து, பாஜக கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை வாயிலாக அதிமுக தலைமை தெரிவித்தது. எனினும் பாஜக நிர்வாகிகள் யாரும், அதிமுக கூட்டணி முறிவு பற்றி கருத்து தெரிவிக்க மறுத்து வருகின்றனர்.
அதிமுகவின் முடிவு பற்றி ட்விட்டரில் பதிவிட்ட பாஜக நிர்வாகி தனது ட்வீட்டை நீக்கினார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த பாஜக நிர்வாகி தனது கருத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கப் சிப் என இருந்து வருகிறார். செய்தியாளர்கள் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியபோதும் கட்சியின் தேசிய தலைமை கருத்து தெரிவிக்கும் என கூறிவிட்டு சென்றார் அண்ணாமலை.
இந்நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ள முடிவு குறித்து தேசிய தலைமை தான் கருத்துக் கூறும். தேசிய தலைமை அறிவிக்கும் வரை நாங்கள் எந்தவித கருத்தையும் கூற முடியாது.
இதுகுறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் எங்களுக்கு அறிவுறுத்தல் தருவார்கள். அப்போது எங்களுடைய கருத்துகளை தெரிவிக்கிறோம். அதிமுகவினர் கூறிய கருத்துக்களும், அவர்களுடைய முடிவுகள் பற்றியும் கருத்து சொல்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை" எனத் தெரிவித்தார்.
-
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா? -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள் -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி












Click it and Unblock the Notifications