கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரும் வரவேற்பு.. கோவையில் முதல்வர் ஸ்டாலின் விசிட்.. உலக அளவில் டிரெண்ட் ஆன #WeStandWithStalin!

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கோவைக்கு சென்று கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்ட நிலையில் "நாங்கள் ஸ்டாலின் உடன் நிற்கிறோம்" என்று பொருள்படும் வகையில் #WeStandWithStalin என்ற டேக் டிரெண்ட் ஆனது. இது உலக அளவில் இன்று மாலை டிரெண்ட் ஆனது.

Recommended Video

    Go Back Stalin VS We Stand With Stalin | ஸ்டாலின் வருகைக்கு குவிந்த ஆதரவும் , எதிர்ப்பும்

    தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை பயன்கொடுக்க தொடங்கி உள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் வேகமாக குறைந்து வருகின்றன. கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே தற்போது கேஸ்கள் குறையாமல் உள்ளது.

    கொரோனா காலத்தில் உயரும் உள்நாட்டு விமான கட்டணங்கள் - ஜூன் 1 முதல் அதிகரிப்பு கொரோனா காலத்தில் உயரும் உள்நாட்டு விமான கட்டணங்கள் - ஜூன் 1 முதல் அதிகரிப்பு

    கோவையில் தினசரி கேஸ்கள் 3500க்கும் குறையாமல் பதிவாகி வருகிறது. கோவையில் அதிக கொரோனா கேஸ்கள் பதிவாகும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் என்று கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை நேரடியாக பார்வையிட்டார்.

    பார்வை

    பார்வை

    கடந்த 20 நாட்களில் 3வது முறையாக இன்று கோவைக்கு சென்றார் முதல்வர் ஸ்டாலின். கோவையில் மாநகராட்சி 5 மண்டலங்களில் தலா 10 இன்னோவா ஆம்புலன்ஸ் வீதம், 50 இன்னோவா ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார். பின்னர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்தபடி ஆய்வு மேற்கொண்டார். அதோடு, ஈரோடு, திருப்பூரில் கொரோனா பணிகளை பார்வையிட்டார்.

    ஈரோடு

    ஈரோடு


    பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி.டி மருத்துவ கல்லூரிக்கு சென்று அங்கு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார். அங்கு கூடுதலாக 300 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையத்தின் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளை திறந்து வைத்தார்.

    வரவேற்பு

    வரவேற்பு

    கொங்கு மண்டலங்களுக்கு முக்கியத்துவம் அளித்து முதல்வர் ஸ்டாலின் இப்படி நேரடியாக பாதிப்பு பகுதிகளை பார்வையிட சென்றது மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் நேராக கொரோனா வார்டுக்கு முதல்வ ஸ்டாலின் சென்று பார்வையிட்டதும், நோயாளிகளிடம் விசாரித்ததும் பெரிய வரவேற்பை பெற்றது.

    வைரல்

    வைரல்

    இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கோவைக்கு சென்று கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்ட நிலையில் "நாங்கள் ஸ்டாலின் உடன் நிற்கிறோம்" என்று பொருள்படும் வகையில் #WeStandWithStalin என்ற டேக் டிரெண்ட் ஆனது. இது உலக அளவில் இன்று மாலை டிரெண்ட் ஆனது. கோவையில் உள்ள மக்கள், தமிழக முழுக்க உள்ள திமுகவினர் முதல்வர் ஸ்டாலினை வரவேற்று இந்த டிவிட்டை செய்தனர்.

    கோவை

    கோவை

    கோவைக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த முக்கியத்துவம், கொரோனா தடுப்பு பணிகள், வேக்சின் கொடுப்பதில் வேகம், சென்னைக்கு அடுத்து கோவையில்தான் அதிக நபர்களுக்கு வேக்சின் கொடுக்கப்பட்டது என்று பல விஷயங்களை பட்டியலிட்டு, முதல்வருக்கு நன்றி தெரிவித்து #WeStandWithStalin டேக் டிரெண்ட் செய்யப்பட்டது. நேரம் செல்ல செல்ல மக்கள் பலர் இதில் நிறைய டிவிட்களை செய்தனர்.

     உலக டிரெண்ட்

    உலக டிரெண்ட்

    1,60,000 டிவிட்களை தாண்டி இதில் மக்கள் பலர் டிவிட் செய்தனர். முக்கியமாக ஸ்டாலின் பிபிஇ கிட் அணிந்து மருத்துவமனைக்கு சென்றதை பாராட்டி பலர் டிவிட் செய்தனர். இதன் காரணமாக மாலை 4 மணி முதல் 6 மணி நேரம் உலக டிரெண்டில் #WeStandWithStalin டேக் 7ம் இடத்திலும் நான்காம் இடத்திலும் பின் 4ம் இடத்திலும் இருந்தது.

    கோ பேக் ஸ்டாலின்

    கோ பேக் ஸ்டாலின்

    அதே சமயம் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பாஜகவினர் சிலர் #GoBackStalin என்ற டேக்கை டிரெண்ட் செய்தனர். இதுவும் சில நிமிடங்கள் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. ஆனால் ஸ்டாலினின் மருத்துவமனை விசிட்டுக்கு பின் மக்கள் பலர் முதல்வருக்கு ஆதரவாக டிவிட் செய்ய தொடங்கிய நிலையில் #GoBackStalin பின்னுக்கு சென்றது.

    English summary
    We Stand With Stalin goes viral worldwide as CM Stalin visits Coimbatore today for Covid relief works.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X