Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெயிட் அண்ட் சீ மோடி.. பாஜக + அதிமுகவை.. ஒன்றாக அதிர வைத்த கோவை மீட்.. ஸ்டாலின் அனுப்பிய மெசேஜ்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோயம்புத்தூரில் நேற்று திமுக சார்பாக நடத்தப்பட்ட முப்பெரும் விழா மிகப்பெரிய வெற்றியாக அந்த கட்சி மூலம் பார்க்கப்படுகிறது. அதோடு இந்த மீட்டிங் மூலம் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு மிகப்பெரிய மெசேஜூம், தேசிய அளவில் இந்திய கூட்டணிக்கு மிகப்பெரிய மெசேஜும் அனுப்பி உள்ளது.

கோவையில் திமுகவின் முப்பெரும் விழா நேற்று நடந்தது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. ஒரு காலத்தில் கோவைக்கு அந்நியமாக இருந்த திமுக இப்போது அங்கே தொடர் வெற்றிகளை பெற்று வரும் நிலையில்.. அங்கேயே முப்பெரும் விழா நடத்தப்பட்டு உள்ளது.

mk stalin rahul gandhi narendra modi covai coimbatore dmk politics

ஸ்டாலின் பேச்சு: நேற்று இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், உடன்பிறப்புகளாலும், கொள்கைத் தோழமைக் கட்சிகளாலும் தான் இந்த வெற்றி சாத்தியமானது. உடன்பிறப்புகளுக்கும் - தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த வெற்றியை காணிக்கை ஆக்குகிறேன். தேர்தல் பிரச்சாரத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களை பேசினார்கள், தமிழர்கள் குறித்து அவதூறு பரப்பினார்கள்; வாட்ஸ் ஆப்பில் பொய்ச் செய்திகளை பரப்பினார்கள்.

இவ்வளவும் செய்தும் பாஜக பெரும்பான்மை பெறவில்லை. இப்போது அவர்கள் பெற்றிருப்பது வெற்றியல்ல; தோல்விதான். பாஜகவிற்கு அதிக பெரும்பான்மை இருந்தபோதே, வாதங்களால் தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் நமது எம்.பிக்கள். இப்போது, மக்களுக்கான நமது குரல் நாடாளுமன்றத்தில் இன்னும் வலுவாக ஒலிக்கப் போகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களே... நாங்களும், தமிழ்நாட்டு மக்களும் உங்கள் தோளில் ஏற்றி வைத்திருக்கும் இந்தக் கடமைகளுக்காக - தமிழ்நாட்டு உரிமைகளுக்காக, நாடாளுமன்றத்தில் உரக்கப் பேசுங்கள். பலம் பொருந்திய எம்.பி.க்கள் சேர்ந்து, பலவீனமான மைனாரிட்டி பாஜக அரசை - பாசிச பாதையில் செல்லாமல் தடுங்கள்.

ஒற்றுமை உணர்வுடன் - கொள்கை திறத்துடன் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்பட வேண்டும். நம்முடைய உறுப்பினர்கள்தான் பா.ஜ.க.வை கொள்கை - கோட்பாடுகள் ரீதியாக அம்பலப்படுத்தினார்கள். கொள்கைரீதியாக அவர்களுடைய வகுப்புவாதத்தை, எதேச்சாதிகாரத்தை, பாசிசத்தை விமர்சிக்கின்ற பாணியை இந்திய நாடாளுமன்றத்தில் தொடங்கி வைத்தவர்கள் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான்;

சமூகநீதிக்காக இந்திய நாடாளுமன்றத்தில் அதிகமாக உரிமைக்குரல் எழுப்பியது மூலமாக, இந்திய அரசியல் செல்ல வேண்டிய பாதையைத் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போட்டுக் கொடுத்தார்கள். எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரதமர் கட்டமைத்த பிம்பத்தை, அருமைச் சகோதரர் ராகுல் காந்தி ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து 'Close' செய்துவிட்டார்! அன்றைக்கு அவர் வழங்கிய இனிப்பு நம்முடைய எதிர்க்கட்சியினரின் கணிப்புகளைப் பொய்யாக்கியது!

இந்தியா கூட்டணித் தலைவர்கள் அனைவருக்கும் நடைபெறும் பாராட்டு விழா இது! இந்தியா கூட்டணி தொண்டர்கள் அனைவருக்கும் நடைபெறும் பாராட்டு விழா இது, என்று ஸ்டாலின் பேசினார்.

ஸ்டாலின் அனுப்பிய முக்கிய மெசேஜ்:

1. ஒரு காலத்தில் கோவைக்கு அந்நியமாக இருந்த திமுக இப்போது அங்கே தொடர் வெற்றிகளை பெற்று வரும் நிலையில்.. அங்கேயே முப்பெரும் விழா நடத்தப்பட்டு உள்ளது. வரிசையாக அங்கு பெட்ரா வெற்றிகளுக்கு பின்.. கோவையும் திமுகவின் கோட்டைதான் என்ற மெசேஜை அதிமுக, பாஜகவிற்கு ஸ்டாலின் அனுப்பி உள்ளார்.

2. தமிழ்நாட்டில் சிலர் காங்கிரஸ் - திமுக கூட்டணி உடையும் என்று வாதங்கள் வைத்த நிலையில் ஸ்டாலின் ராகுலை பாராட்டி.. தங்களுக்கு இடையிலான "ப்ரோமான்ஸ்" பற்றி பேசி.. காங்கிரஸ் - திமுக உறவை உறுதி செய்துள்ளார்.

3. பாஜக அரசு வரும் நாட்களில் திமுக உதவியை நாடலாம்.. மசோதாக்களை நிறைவேற்ற திமுக உதவியை நாடலாம் என்று கூறப்பட்ட நிலையில், பலவீனமான மைனாரிட்டி பாஜக அரசை - பாசிச பாதையில் செல்லாமல் தடுங்கள் என்று கூறி மசோதாக்களுக்கு ஆதரவு தர மாட்டோம் என்ற சைலன்ட் மெஸேஜையும் ஸ்டாலின் மோடிக்கு அனுப்பி உள்ளார்.

4. அதோடு இந்த கூட்டத்தில் பெரிதாக அதிமுகவை பற்றி ஸ்டாலின் பேசவே இல்லை. அதிமுக திமுகவிற்கு இனியெல்லாம் போட்டியில்லை என்ற narrative உருவாக்கும் விதமாக ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

5. பாஜக நினைத்ததை எல்லாம் இனி செய்ய முடியாது.. வெயிட் அண்ட் சீ மோடி என்று ஸ்டாலின் கூறிய நிலையில்.. வரும் நாட்களில் பாஜக ஆட்சி கவிழ்ந்து பெரும்பான்மை நிரூபிக்க தேவைப்பட்டாலும் திமுக உதவாது என்பது உறுதி ஆகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+