விட மாட்டேன்.. அதிமுகவில் என்ன நடக்குது தெரியுமா? "பாயிண்டை" பிடித்த ஸ்டாலின்.. கோவையில் அட்டாக்!
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் நடந்து வரும் அரசு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சியான அதிமுகவை கடுமையாக தாக்கி பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் 3 நாள் பயணமாக நேற்று இரவு கோவைக்கு வந்தார். கோவை, ஈரோடு, திருப்பூர் மூன்று மாவட்டங்களிலும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.
நாளை மாற்று கட்சியினர் திமுகவில் கலந்து கொள்ளும் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். அதேபோல் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்விலும் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
அதன் ஒரு கட்டமாக இன்று கோவையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் ரூ.662.50 கோடியில் 748 புதிய திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
ஏற்கனவே முடிக்கப்பட்ட திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். இதன்பின் கோவையில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

ஸ்டாலின் உரை
முதல்வர் ஸ்டாலின் தனது உரையில், சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோருக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறேன். உங்கள் தொகுதியில் உள்ள குறைகளை பட்டியல் இடுங்கள் என்று கூறி இருக்கிறேன். அதிமுகவை சார்ந்தவர்களாக இருந்தாலும், பாஜகவை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி. எல்லோருக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறேன். அவர்கள் இதற்காக என்னை பாராட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்கள் தொகுதி முன்னேற்றம் அடைந்தால் சரி.

எதிர்க்கட்சி பாராட்டு
எதிர்க்கட்சிகளின் பாராட்டுகளை எதிர்பார்த்து கடமை செய்பவன் ஸ்டாலின் அல்ல. இது என்னுடைய பொறுப்பு. மக்களுக்கு நல்லது செய்வது என் கடமை. சிலர் காழ்ப்புணர்ச்சியோடு தூற்றுகிறார்கள். பரவாயில்லை. அவர்களும் பிழைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பிழைக்கட்டும். கண்ணதாசன் சொன்னது போலத்தான் போற்றுவார் போற்றட்டும். புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும். அவர் சொன்னதைத்தான் நானும் இப்போது சொல்கிறேன்.

பாராட்டு தேவையில்லை
இவர்களின் பாராட்டுக்கள் எனக்கு தேவையில்லை. மக்களின் பாராட்டுக்கள் எனக்கு போதும். உங்கள் முகங்களில் பார்க்கும் மகிழ்ச்சிதான் எனக்கு மகிழ்ச்சி தருகிறது. நான் கோவைக்கு வந்த போது மக்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். எனக்கு இந்த மக்கள் ஆதரவு போதும். எனக்கு இந்த ஆதரவு கிடைக்க கூடாது என்று நினைப்பவர்கள்தான் திமுகவை விமர்சனம் செய்கிறார்கள். என்னை விமர்சனம் செய்கிறார்கள். என்னை விமர்சனம் செய்வதில் பிரச்சனை இல்லை.

விமர்சனம் வையுங்கள்
விமர்சனம் மூலம் வளர்ந்தவன் நான். எதிர்ப்பின் மூலம் வளர்ந்தவன் நான். என்னை விமர்சனம் செய்யுங்கள். நான் மேலும் வளர்வேன். ஆனால் இப்படி விமர்சனம் செய்வதன் மூலம் தமிழ்நாட்டிற்கு குந்தகம் விளைவிக்க நினைத்தால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன். அதை விட மாட்டேன். பயனற்ற சொற்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

அதிகார மோதல்
சொந்த கட்சிக்குள் நடக்கும் அதிகார மோதலை அவர்களால் தடுக்க முடியவில்லை. அவங்க கட்சியில் என்ன நடக்கிறது.. அதிகார மோதல்தான் நடக்கிறது. அவர்கள், தங்களின் கையாலாகாததனத்தை மறைப்பதற்காக இப்படி அரசை விமர்சனம் செய்கிறார்கள். உங்களுக்கு எல்லாம் அரசை விமர்சனம் செய்ய எந்த தகுதியும் இல்லை. அரசை பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது. மக்கள் விமர்சனம் செய்யட்டும். மக்கள் கோரிக்கை வைக்கட்டும். இது மக்களின் அரசு. அவர்கள் சொல்வதை நான் செய்வேன், என்று முதல்வர் ஸ்டாலின் கோவை நிகழ்ச்சியில் பேசினார்.
-
மொத்த தென்னிந்தியாவிற்கே முன்னோடி.. தொகுதி மறுவரையறையை கையில் எடுத்த தமிழ்நாடு.. தரமான சம்பவம் -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
7 முறை போட்டி.. 5 முறை வெற்றி! சொந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் கிராப் என்ன! -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு?












Click it and Unblock the Notifications