கோவை காதலனுடனான புகைப்படத்தை கணவனுக்கே அனுப்பிய மனைவி.. காட்டிக்கொடுத்த தாய்மாமன்.. என்ன நடந்தது?
கோவை: கோவையில் மகளிர் விடுதியில் தங்கியிருந்த பெண், கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை கணவனுக்கே அனுப்பினாராம். இதனால் ஆத்திரத்தில் இருந்த கணவனுக்கு பெண்ணின் தாய் மாமனே ஸ்கெட்ச் போடுவதற்கு உதவி உள்ளாராம். இதனால் என்ன நடந்தது கோவையில்.. அவர்கள் கொடுத்த வாக்குமூலம் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்..
கோவை கணபதியை சேர்ந்த 30 வயதாகும் ஸ்ரீபிரியா, திருநெல்வேலி மாவட்டம் தருவையை சேர்ந்த 34 வயதாகும் பாலமுருகனும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். பாலமுருகன் கட்டிட வேலை செய்து வந்தார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். 10 வருடங்களாக இனிமையாக சென்ற காதல் திருமண வாழ்க்கை கள்ளக்காதலால் கசந்து போனது. ஸ்ரீபிரியாவுக்கும், பாலமுருகனின் நெருங்கிய உறவினருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கோவையில் வேலை
இதனால் பாலமுருகன் ஸ்ரீபிரியா தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஸ்ரீபிரியா கோவை வந்தார். பின்னர் அவர் குழந்தைகளை தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, கோவை காந்திபுரம் 2-வது வீதி தொடர்ச்சி பகுதியில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கி இருந்தபடி, ஸ்ரீ பிரியா அருகில் இருந்த ஒரு பெரிய துணிக்கடையில் வேலை செய்து வந்தார்.
விடுதிக்கு சென்றுள்ளார்
இந்த நிலையில் ஸ்ரீபிரியாவை பார்ப்பதற்காக பாலமுருகன் நேற்று முன்தினம் காலையில் கோவை வந்தார். பின்னர் அவர் ஸ்ரீபிரியாவின் தாய் மாமாவான 52 வயதாகும் ராஜாவை அழைத்துக்கொண்டு தனது மனைவி ஸ்ரீபிரியா தங்கி இருக்கும் மகளிர் விடுதிக்கு சென்றார். அங்கு 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாம். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற பாலமுருகன் கண்ணிமைக்கும் நேரத்தில் மனைவியை வெட்டி கொன்றாராம் .
உடலுடன் செல்ஃபி
பின்னர் உடலுடன் அமர்ந்து செல்பி எடுத்ததுடன், துரோகத்தின் சம்பளம் மரணம் என்று வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தார். இந்த கொலை தொடர்பாக தகவல் அறிந்த கோவை ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு இருந்த பாலமுருகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
வாக்குமூலம்
அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், ஸ்ரீபிரியாவின் கள்ளக்காதலை அறிந்த பாலமுருகன், தனது மனைவியை கண்டித்தாராம். இதனால் கடந்த 6 மாதத்துக்கு முன்பு கணவரை விட்டு ஸ்ரீபிரியா பிரிந்து வாழ்ந்துள்ளார். அதன் பின்னர் கோவை வந்த ஸ்ரீபிரியா மகளிர் விடுதியில் தங்கி இருந்து துணிக்கடை ஒன்றில் வேலைக்கு சென்று வந்தார். அதன் பின்னரும் ஸ்ரீபிரியா கள்ளக்காதலை கைவிடவில்லை என கூறப்படுகிறது. அவரை கோவைக்கு வரவழைத்து அவருடன் சுற்றி உள்ளாராம்.
நெருக்கமான புகைப்படங்கள்
அத்துடன் தனது கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை ஸ்ரீபிரியா, வாட்ஸ்-அப்பில் தனது கணவர் பாலமுருகனுக்கு அனுப்பி உள்ளாராம் அதை பார்த்ததும் பாலமுருகனுக்கு ஆத்திரம் ஏற்பட்டதாம். இதனால் மனைவியை தீர்த்து கட்ட முடிவு செய்து, அரிவாளுடன் கோவை வந்தார். ஆனால் மனைவி எங்கு தங்கி இருக்கிறார் என்பது தெரியவில்லை.
காட்டிக் கொடுத்த தாய்மாமா
இந்த நிலையில் கோவை கணபதி பகுதியில் தங்கி இருக்கும் ஸ்ரீபிரியாவின் தாய்மாமா ராஜாவை சந்தித்து அவர் தங்கி இருக்கும் விவரத்தை கேட்டு அறிந்து கொண்டாராம். நான் சென்று அழைத்தால் அவர் வரமாட்டார். அத்துடன் அவர் இருக்கும் இடமும் எனக்கு தெரியாது. எனவே நீங்களும் என்னுடன் வாருங்கள் என்று பாலமுருகன், ராஜாவை அழைத்துச்சென்று உள்ளார்.
அவருடன் சென்ற ராஜாவும், ஸ்ரீபிரியா தங்கி இருக்கும் விடுதியை காண்பித்தாராம். அத்துடன் அவர்தான் தனது மருமகளான ஸ்ரீபிரியாவை சந்திக்க காத்திருப்பதாக விடுதி ஊழியரிடம் கூறி வெளியே அழைத்து வந்துள்ளார். அவர் வெளியே வந்தபோதுதான் இந்த கொலை சம்பவம் நடந்து உள்ளது. எனவே இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும், ஸ்ரீபிரியா இருக்கும் இடத்தை காட்டிக்கொடுத்ததாகவும் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து உள்ளோம் என போலீசார் தெரிவித்தனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications