கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ரூ.115 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலம்.. இப்ப என்னாச்சுன்னு பாருங்க
கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ரூ.115 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், அந்த மேம்பாலத்தில் மழை தண்ணீர் செல்ல வழியில்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்
கோவையின் புறநகர் பகுதியான பெரியநாயக்கன்பாளையம் மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்தள்ளது. இந்த பகுதியில் ஏரளாமான தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் அமைந்திருப்பதால் எப்போது சாலையில் போக்குவரத்து நெரிசல அதிகமாக இருக்கும்.

இதையடுத்து பெரிய நாயக்கன் பாளையத்தின் பிரதான சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் அப்பகுதியில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. சுமார் ரூ.115 கோடி மதிப்பில் 1,882 மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேம்பாலத்தின் அகலம் 17.60 மீட்டர் ஆக அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. மொத்தம் 48 தூண்களைக் கொண்டு 4 வழித்தட போக்குவரத்து கொண்ட பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2020 நவம்பரில் துவங்கியது.
பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பு மேம்பாலம், அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கி எல்.எம்.டபிள்யூ சந்திப்பு, பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பு ஆகியவற்றை கடந்து வண்ணான்கோவில் சந்திப்பில் முடிவடையும் வகையில் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
115 கோடி மதிப்பில் கட்டி திறக்கப்பட்ட இந்த மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் நிற்கிறது. மழை நீர் செல்ல வழி இல்லாத காரணத்தால் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். தண்ணீர் தேங்கி நிற்பதால் மேம்பாலத்தில் சென்ற வாகனங்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றன.. இந்த பெரியநாயக்கன் பாளையம் மேம்பாலத்தில் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இந்த மேம்பாலத்திலிருந்து கீழ்நோக்கி வரும் இறங்குதளமும் சர்வீஸ் சாலையும் சந்திக்குமிடம் மிக நெருக்கமாக இருக்கும்படி உள்ளதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள், பாலத்திலிருந்து இறங்கும் வாகனங்களும் ஒரே இடத்தில் திடீரென சந்திப்பதால், விபத்து நடக்க அதிக வாய்ப்புள்ளதாக fகடந்த ஆண்டு புகார் தெரிவித்தனர்.. மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு சர்வீஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் தெரிவதில்லை என்றும் முன்பு குற்றம்சாட்டினார்கள்.












Click it and Unblock the Notifications