நேரம் கடந்து அண்ணாமலை பிரச்சாரம் செய்ததை தட்டி கேட்டதால்தான் அடி உதை.. நேரில் பார்த்தவர் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தில் திமுகவினர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேரில் பார்த்த சிலர் என்ன நடந்தது என்று ஊடகங்களில் விவரித்துள்ளனர்.

கோவை லோக்சபா தேர்தல் களம் தற்போது சூடு பிடித்து உள்ளது. கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை களமிறக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

What really happened in Annamalai late night campaign and attack on DMK in Coimbatore

அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் களமிறக்கப்பட்டு உள்ளார். ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸ் தேர்வாகி மாறி உள்ளார். இதனால் அங்கே கடுமையான மும்முனை போட்டி நிலவி வருகிறது.

அண்ணாமலை பிரச்சாரம்: பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு சிங்காநல்லூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழக அரசியல் மாற்றத்திற்கு பிள்ளையார் சுழி போடும் வகையில் கோவை இருக்க வேண்டும். திமுகவினர் மொத்த சொத்தையும் எடுத்து வந்தாலும் கோவை மக்கள் நேர்மையின் பக்கம் நிற்பார்கள்.

அடுத்த 7 நாட்களுக்கு நம் தொலைபேசிக்கு அழைப்பு வந்தால் அலைபேசியை எடுத்து ஹலோ சொல்வதற்கு பதிலாக தாமரை வணக்கம் எனச் சொல்லுங்கள். ஹலோ என ஆங்கில வார்த்தை வேண்டாம். தொலைபேசியில் பேசும்போது தாமரை வணக்கம் எனச் சொல்லும்போது, தாமரை சின்னம் அனைவருக்கும் போய்ச் சேரும். கோவையில் தாமரையை மலர வைப்போம்

11 மணி தாண்டி பிரச்சாரம்; இதையடுத்து ஆவாரம்பாளையம் சென்ற அண்ணாமலை அங்கே நேரம் கடந்து பிரச்சாரம் செய்துள்ளார். கோவை ஆவாரம்பாளையத்தில் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரத்தில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார். அண்ணாமலை இப்படி நேரம் கடந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட திமுகவினரை அடித்து, உதைத்து பாஜகவினர் தாக்கியதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது.

ஆவாரம்பாளையம் 28வது வார்டு பகுதியில் இரவு 10.40 மணி அளவில் பிரசாரம் செய்த் நிலையில் அண்ணாமலையை திமுகவினர் எதிர்த்து உள்ளனர். இதையடுத்து அண்ணாமலைக்கு பின் மீது வாகனங்களில் வந்த பாஜகவினர் திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கே கடுமையான மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

இந்த விவகாரத்தில் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட திமுகவினரை தாக்கிய பாஜகவினர் மீது கோவை போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

What really happened in Annamalai late night campaign and attack on DMK in Coimbatore

என்ன நடந்தது?: கோவையில் நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தில் திமுகவினர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேரில் பார்த்த சிலர் என்ன நடந்தது என்று ஊடகங்களில் விவரித்துள்ளனர். அதில், ஆவாரம்பாளையத்தில் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டார். 10.45க்குத்தான் அவர் பிரச்சாரம் செய்ய வந்தனர். அப்போது மக்கள்தான் ஸ்பீக்கர் போடாதீங்க என்று கூறினர். ஆனால் அங்கே இருந்த மக்களை திமுகவினரை பாஜகவினர் தாக்கி துரத்தி விட்டனர் .

அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட திமுகவினரை பாஜகவினர் அடித்து, உதைத்து தாக்கினர். அடித்தவர்கள் எல்லோரும் பாஜக பொறுப்பாளர்கள்தான். அண்ணாமலை சொல்லித்தான் பாஜகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.. அடித்தவர்கள் முழுக்க முழுக்க மதுபோதையில் இருந்தனர் , என்று நேரில் பார்த்தவர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+