செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததால் கொங்கு மண்டலம் இனி என்னாகும்?
கோவை: கொங்கு மண்டலம் தான் அதிமுகவின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அங்குள்ள அதிமுகவின் முக்கிய தலைவராக பல வருடங்களாக இருந்த செங்கோட்டையன் தற்போது தவெகவில் இணைந்திருப்பதால், கொங்கு மண்டலத்தில் இனி என்னாகும். அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த சில நாட்களாக த.வெ.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. இதை உறுதிப்படுத்தும் வகையில் செங்கோட்டையன் நேற்று முன்தினம் தலைமை செயலகம் வந்து சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதம் கொடுத்தார். தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில், த.வெ.க.வில் இணைவதற்காக நேற்று காலை 9.45 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி அலுவலகத்திற்கு செங்கோட்டையன் வந்தார். அவரை வாசலில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றார்கள்.
தவெகவில் செங்கோட்டையன்
கட்சி அலுவலகம் வந்த செங்கோட்டையனை விஜய் சால்வை அணிவித்து வரவேற்றார். செங்கோட்டையனுடன், முன்னாள் எம்.பி. சத்யபாமா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், வெங்கடாசலம், முத்துக்கிருஷ்ணன், புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.சாமிநாதன், அசனா ஆகியோர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் த.வெ.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை விஜய் வழங்கினார். அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், கொங்கு மண்டல அரசியல் தலைவர்களில் முக்கியமான முகம்களில் ஒருவராகவும் பார்க்கப்படும் செங்கோட்டையம் விஜய்யின் தவெகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கொங்கு மண்டலம் அதிமுகவின் பலம்
கொங்கு மண்டலம் தான் அதிமுகவின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அங்குள்ள அதிமுகவின் முக்கிய தலைவராக பல வருடங்களாக இருந்த செங்கோட்டையன் தற்போது தவெகவில் இணைந்திருப்பதால், கொங்கு மண்டலத்தில் இனி என்னாகும். அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம். கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை அதிமுகவிற்கு இயல்பாக வாக்குசதவீதம் அதிகம். கடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை வென்ற திமுக கூட்டணியால் ஒரு இடத்தில் கூட கோவை மாவட்டத்தில் வெல்ல முடியவில்லை.. அங்குள்ள 10 தொகுதிகளிலும் தோற்றுப்போனது.
அதிமுகவிற்கு பாதிப்பு
அதேபோல்ஒட்டுமொத்தமாக கொங்கு மண்டலத்திலும் பெருவாரியாக அதிமுகவே வெற்றி பெற்றது. அதனால் 75 என்கிற அளவில் பலமான எதிர்க்கட்சியாக அதிமுக இப்போது இருக்கிறது. இது ஒருபுறம் எனில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கும் அங்கு கணிசமான வாக்கு சதவீதம் இருக்கிறது. அதிமுக பாஜக இரு கட்சிகளும் கொங்கு மண்டலத்தில் பலமாக உள்ள நிலையில், செங்கோட்டையனின் இந்த நகர்வால் என்ன மாதியான பாதிப்பு ஏற்படும் என்ற கேள்விகள் பலருக்கும் எழும். அதேபோல் பாதிப்பே அதிமுகவிற்கு கொங்கு மண்டலத்தில் இல்லையா என்றால்.. அப்படி சொல்லிவிட முடியாது.. அதிமுகவிற்கு ஓரளவு பாதிப்பு இருக்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
கவுண்டர் சமுதாயம்
ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை அதிமுகவில் இருந்து நீக்கியதால் தென்மாவட்டங்களில் அதிமுகவிற்கு முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாக குறைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், கவுண்டர் சமுதாய வாக்குகள் பெருவாரியாக அதிமுகவிற்கு தான் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.. கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் அதிமுகவின் முக்கிய தலைவர்களாக இருக்கிறார்கள். இதில் செங்கோட்டையனும் இருந்தார்..
அண்ணாமலை பாதிப்பு
இப்போது செங்கோட்டையன் தவெகவிற்கு போய்விட்டார். அவருக்கு என்று ஈரோடு மாவட்டத்திலும், கொங்கு மண்டலத்திலும் ஒரு செல்வாக்கு இருக்கத்தான் செய்கிறது. எனவே கவுண்டர் சமுதாயத்தின் வாக்குகள் கொஞ்சம் அங்கு நகருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்னொரு விஷயம் அரசியல் நிபுணர்களால் அதிகம் சொல்லபடுவது.. அண்ணாமலை ஃபேக்டர். என்னதான் பாஜக மேலிடம் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டார்கள் என்றாலும், அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி மேல் உள்ளுக்குள் அணையாத கோபம் அப்படியே இருக்கிறதாம்.. இது தொடர்பாக சில பிரஸ்மீட்களையும் அண்ணாமலையிடம் இருந்து பார்க்கவும் முடிந்தது.
என்னாகும் இனி
எனவே அண்ணாமலை ஆதரவாளர்கள் சிலர், அதிமுகவிற்கு எதிராக சில உள்ளடி வேலைகளை பார்க்கவும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.. வானதி சீனிவாசன், எடப்பாடி பழனிசாமியுடன் அண்ணாமலைக்கு ஒரு நல்ல இணக்கம் இல்லை என்றும் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். எனவே செங்கோட்டையனின் தவெக தாவல் என்பது மேற்கு மண்டலத்திலும், கவுண்டர் சமுதாய வாக்குகள் பெறுவதிலும் ஒரு தாக்கம் இருக்கும் என்கிறார்கள். ஏற்கனவே திமுக மேற்கு மண்டலத்தை விட்டுவிடக்கூடாது என்று தான் செந்தில் பாலாஜியையு இறக்கி உள்ளது. எனவே 2021 வரை இருந்த வாக்குகளில் கணிசமானவற்றை திமுகவும் பிரிக்கும்.. செங்கோட்டையனுடன் சேர்ந்து அங்கேயும் (தவெக) போவதற்கு வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
-
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
கோவை போத்தனூர் -கரூர் இடையே தனி ரயில் பாதை.. காங்கேயம்,வெள்ளக்கோவில் வழியாக அமைக்க பயணிகள் கோரிக்கை -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications