கோவை லுலு மால் சூப்பர் ஆபர்.. மீண்டும் தள்ளுபடி.. வியப்பூட்டிய கோயம்புத்தூரில் லுலு ஹைப்பர்
கோவை: கோவை லுலு மால் மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சியை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு தந்துள்ளது.. அது என்ன தெரியுமா?
கோயம்புத்தூரை பொறுத்தவரை, மிகப்பெரிய தொழில் நகரம் என்பதால் ஏகப்பட்ட டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், ஷாப்பிங் மால்கள் என நிறைந்து உள்ளன.. ஆனால், இவையெல்லாம் தனித்தனி பொருட்களாக விற்பனை செய்யப்படும் நிலையில், எல்லா பொருட்களையும், ஒரே இடத்தில் கிடைக்கக்கூடியதாக அமைந்துள்ள இடம்தான் ஹைப்பர் மார்க்கெட்.

மார்க்கெட்: தமிழகத்திலேயே முதல் ஹைப்பர் மார்க்கெட் கோவை அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில்ஸ் வளாகத்தில், லுலு ஹைப்பர் மார்க்கெட் 1.20 லட்சம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.
இந்த லுலு மால் ஆரம்பித்த நாளிலிருந்தே இப்போதுவரை விற்பனையில் அதிரடி காட்டி வருகிறது.. மற்ற ஷாப்பிங் மால்களில் கூட்டம் குறைந்துவிட்டதாம்.. அதுமட்டுமல்ல, லுலு மால்களில் அறிவிக்கப்படும் ஸ்பெஷல் ஆஃபர்களுக்கெனவே, கூட்ட நெரிசல் அதிகம் வருவதாக சொல்கிறார்கள்.. கடந்த தீபாவளி பண்டிகைக்கு, 60 சதவீதம் வரை தள்ளுபடியில் பொருட்களுக்கான ஆஃபர் போடப்பட்டது.
ஸ்பெஷல்ஸ்: ஜெக்ஸ் என்ற புதிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அறிமுக விழாவின்போது, புதிதாக திருமணமான 50 தம்பதிகளுக்கு, ரூ.1999 க்கு மேல் பொருட்கள் வாங்கினால் அரை கிராம் தங்க காசு பரிசாக வழங்குவதாக அறிவித்தது. "பியூட்டி பெஸ்ட்" என்ற அழகு சாதனப்பொருட்களுக்கு 50 சதவீத தள்ளுபடி விலையில் பொருட்கள் வழங்கப்பட்டன.
ரம்ஜானையொட்டி, பொம்மைக்களுக்கு திருவிழா என்ற பெயரில் அனைத்து பொம்மை மற்றும் விளையாட்டு பொருட்களுக்கும் 50 சதவீத தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டன. குறைந்தபட்சம் 20 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. இதோ இந்த கோடை வெயிலுக்கு ஏசி உள்ளிட்ட பொருட்களில் 50 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.
குழந்தைகள்: அவ்வளவு ஏன்? அரிசி வகைகளுக்குகூட "ரைஸ் காலா" என்ற பெயரில் ஆஃபர் உள்ளது.. இப்படி பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என ஒவ்வொரு பிரிவினரையும் டார்கெட் செய்து ஆஃபர்கள் அறிவிப்பதுதான், லுலுவின் ஸ்பெஷலாக இருந்து வருகிறது.
அரிசிக்கும் தள்ளுபடியா என்று, அரிசி வியாபாரிகளே கலங்கி போய்விட்டார்களாம்.. கோவையில் லுலு மால் வந்திருப்பதை போல, சென்னையில் லுலுவை திறக்க விட மாட்டோம் என்று வியாபாரி சங்கங்கள் பலமுறை கொந்தளித்திருக்கின்றன.. ஆனாலும், லுலுவின் அடுத்தக்கட்ட வளர்ச்சி நடந்து கொண்டேயிருக்கிறது.
தஞ்சாவூரில் அரிசி அரைக்கும் ஆலையும், கோவையிலேயே இன்னொரு லுலு நிறுவனத்தின் கிளை திறக்கப்படும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ஒருவேளை, இந்த கிளை திறக்கப்பட்டால் உள்ளூர் மக்களுக்கு நிறைய வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் நம்பப்பட்டு வருகிறது,
தள்ளுபடி: இப்போதும் இன்னொரு ஆஃபர் அறிவித்துள்ளது. அதன்படி, 500-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு குறைந்தபட்சமா, 10 சதவீதம் முதல் தள்ளுபடி தரப்பட்டுள்ளது... இதில், சில பொருட்களுக்கு 10 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்பட்டு வருகிறது.. வரும் 31ம் தேதி இந்த சலுகை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்துள்ளது..
இதைத்தவிர, பாதாம் பொருட்களுக்கெனவே பாதம் திருவிழா என்ற பெயரில் சிறப்பு விற்பனை நடக்கிறது. இந்த ஆஃபர்தான் கோவையை திரும்பி பார்க்க வைத்து வருகிறது..!!
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications