விரிவுபடுத்தப்படும் கோவை மாநகராட்சி.. புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகள் எவை?
கோவை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் மீட்டும் பெரிய மாநகராட்சியாக கோவை மாநகராட்சி உள்ள நிலையில், மாநகரின் எல்லையை விரிவுபடுத்தும் வகையில் நகரை ஒட்டிய பல கிராம ஊராட்சிகள், பேரூராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல மாநகராட்சிகள், நகராட்சிகள் நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டன. அரியலூர் நகராட்சி, செங்கல்பட்டு நகராட்சி, மன்னார்குடி, திருவாரூர், விருதுநகர் நகராட்சிகள், பொன்னேரி, ஆரணி, திருவதிபுரம், வந்தவாசி நகராட்சிகள் என்று பல மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன.

அதேபோல, திருநெல்வேலி முதல் திருப்பூர் மாநகராட்சி, சென்னைக்கு அருகில் உள்ள தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளன. திருச்சி, மதுரை, கரூர், ஓசூர், மாநகராட்சிகள் விரிவாக்கப்பட்டு உள்ளன. நீலகிரியில் அமைந்துள்ள ஊட்டி விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உதகமண்டலம் பேரூராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் தீர்மானம் முன்னதாக நிறைவேற்றப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றத்தால் ஊட்டியை மாநகராட்சியாக விரிவாக்கம் செய்வது சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த நடவடிக்கை ஊட்டியில் சூழலியல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
இதேபோல, கோவை மாவட்டத்திலும் கோவை மாநகராட்சியுடன் பல கிராம ஊராட்சிகள், பேரூராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து வருவாய் ஈட்டும் பெரிய மாநகராட்சியாக கோவை மாநகராட்சி உள்ளது. கோவை மாவட்டம் மொத்தம் 4,723 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும்.
கோவையில் நகரப் பகுதி மட்டும் 1,519 சதுர கிலோ மீட்டரை உள்ளடக்கி உள்ளது. மாநகரின் எல்லையை விரிவுபடுத்தும் வகையில், நகரை ஒட்டிய மற்றும் மாநகர எல்லைக்குள் வர தகுந்த பகுதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு நகராட்சிகளுடன் 13 பேரூராட்சிகள் மற்றும் 196 கிராம ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 4 மாநகராட்சிகளுடன், 2 பேரூராட்சிகள் மற்றும் 46 ஊராட்சிகளும் இணைக்கப்பட உள்ளன. கோவையைப் பொறுத்தவரை, மாநகராட்சியுடன் ஒரு நகராட்சி, 4 பேரூராட்சிகள், 11 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. கிராம ஊராட்சிகளின் பதவிக் காலம் முடிந்தவுடன், கிராம ஊராட்சிகள் இணைப்புக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியுடன் மதுக்கரை நகராட்சி, இருகூர், பேரூர், பள்ளபாளையம், வெள்ளலுார் ஆகிய பேரூராட்சிகள், குருடம்பாளையம், சோமையம்பாளையம், பேரூர் செட்டிபாளையம், கீரணத்தம், நீலாம்பூர், மயிலம்பட்டி, பட்டணம், வெள்ளானைப்பட்டி, கள்ளிப்பாளையம், சின்னியம்பாளையம், சீரப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன.
இப்பகுதிகள் இணைக்கப்படுவதன் மூலம் 100 வார்டுகள் கொண்ட கோவை மாநகராட்சி 150 முதல் 200 வார்டுகள் உள்ள மாநகராட்சியாக உருவாகவுள்ளது. கிராம பஞ்சாயத்துகள் டிசம்பரில் காலாவதியானதும், இணைப்பு முன்மொழிவுகள் நிறைவேற்றப்படும். டிசம்பர் 2024 அல்லது ஜனவரி 2025க்குள் இந்த விரிவாக்கத்திற்கான பணிகள் மொத்தமாக முடிவு அடையும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications