ஜனநாயகன் சென்சார் சான்றிதழ்.. தடுப்பது யார்.. செங்கோட்டையன் பேட்டி
கோவை: "ஜனநாயகன்" திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, "யார் தடுக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்" என த.வெ.க. தலைமை நிலைய ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. படம் வெளியாவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இன்னமும் சான்றிதழ் கிடைக்காததால் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.
ஜனநாயகன் படத்தை விஜய் தனது கடைசி படமாக அறிவித்திருந்த நிலையில் , அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த படம் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்த பகவத் கேசரி படத்தின் ரீமேக் போல் உள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது. ஜனநாயகன் படம் குறித்து தவெக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஜனநாயகன் படம்அரசியல் படமாக இருக்கும் , அரசியல்வாதிகளை பற்றி பேசுவது போன்ற வசனங்கள் இடம் பெற்றிருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், தமிழக அரசு லேப்டாப் வழங்குவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், "ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே வழங்க வேண்டியதை இப்போது வழங்குவது பொருத்தமல்ல.அப்போது இருந்த மாணவர்களின் நிலை குறித்து கல்வியாளர்களுக்கு நன்கு தெரியும்.எப்போது கிடைக்க வேண்டுமோ அப்போது கிடைத்திருக்க வேண்டும்" என்று கூறினார்.
மேலும், "ஜனநாயகன்" திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, "யார் தடுக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்" என அவர் பதிலளித்தார். அத்துடன், "தமிழ்நாட்டில் 'ஜனநாயகன்' திரைப்படம் எப்போது வெளியாகும் என மக்கள் காத்திருக்கின்றனர். திரைப்படத்திற்கு தடை விதிப்பது அவர்களுக்கு நல்லதல்ல. அத்தகைய சூழல் ஏற்பட்டால் அது வேதனைக்குரியதாக அமையும்.திரைப்படத்தை தடுக்குவது சரியான முடிவாக இருக்காது. அப்படி செய்தால் அது அவர்களுக்கே பாதகமாக முடியும்" என தெரிவித்தார். வழக்கு தொடரப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "அது என் கவனத்திற்கு வரவில்லை" என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
செங்கோட்டையன் மட்டுமின்றி, பல்வேறு தவெக நிர்வாகிகளும் ஜனநாயகன் படத்திற்கு சான்றிதழ் கிடைக்காதது குறித்து விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விரைவில் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன?












Click it and Unblock the Notifications