சட்டமன்றத்தில் இடத்தை மாற்றி விஜய் பேசியது என்ன.. செங்கோட்டையன் சொன்ன சர்ப்ரைஸ் தகவல்

Subscribe to Oneindia Tamil

கோவை: கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து மொத்த நாட்டையும் தவெக ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தேசியளவில் இந்தியா கூட்டணியில் தவெக அங்கம் வகிக்கிறது. விஜய்யை தேசிய அரசியலில் முகமாக மாற்ற தவெகவினர் காய் நகர்த்துகின்றனர். இந்தியா டுடே கருத்துக்கணிப்பில், அடுத்த பிரதமருக்கான கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். சட்டமன்றத்தில் விஜயின் நடவடிக்கை குறித்தும், அவரின் தேசிய அரசியில் திட்டமிடல் குறித்தும் செங்கோட்டையன் பல தகவல்களை கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "முதலமைச்சர் என்னிடம் என்ன பேசினார் என்று சொல்ல முடியுமா. அது முறையாக இருக்காது. அவரை பொறுத்தவரை எல்லாரையும் உற்சாகப்படுத்த வேண்டுமென விரும்புகிறார். சுருக்கமாக சொன்னால் ஒரு முதலமைச்சர் இந்தளவுக்கு நடந்து கொண்டிருக்கிறார் என்ற நிலை மாறியுள்ளது. எல்லாரும் உற்சாகத்தோட பணியாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் முதலமைச்சர் எல்லோரின் அருகில் வந்து சுமார் ஒரு மணி நேரம் அமர்ந்தார்" என்றார்.

Sengottaiyan Vijay

தவெக சாதனை

சட்டமன்றம் டிராமா மன்றமாக மாறி கொண்டிருக்கிறது என்கிற அண்ணாமலையின் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, "ஒவ்வொருவரின் கருத்துக்கும் பதில் கருத்து சொல்வது தேவையற்றது. இது மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும். மக்களின் நலம் காக்கும் வரை இந்த அரசு பணியாற்றி வருகிறது. தமிழகம் வளர்வதும், மக்கள் கொடுக்கிற கோரிக்கைகளை நிறைவேற்றுவதும் தான் எங்களின் நோக்கம்.

அதில் முனைப்புடன் பணியாற்றுகிறோம். ஆட்சிக்கு வந்து குறுகிய நாட்கள் தான் ஆகிறது. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக மக்கள் பணியாற்றுகிறோம். கரும்பு கொள்முதலுக்கு டன்னுக்கு ரூ.4,000 இதற்கு முன்பு தமிழக அரசு வரலாற்றில் எந்த அரசும் கொடுக்கவில்லை. நெல்லுக்கு குவிண்டால் ரூ.2750 ஊக்கத்தொகை உயர்த்தி கோடுப்பதும் எந்த அரசும் செய்யாத ஒன்று. திமுக, அதிமுக ஆட்சியில் இது மிகவும் குறைவாக இருந்தது.

தேசிய அரசியல்

இன்றைக்கு மாற்றம் உருவாகிறது. விவசாயிகள் நலன் காக்கும் அரசாக தவெக உள்ளது. விவசாயிகளை பொறுத்தவரை நம்மிடம் உள்ள நிதியை வைத்து அதிக நலத்திட்டங்கள் செய்கிறோம். முதலமைச்சர் பணியாற்ற பணியாற்ற தான் மக்கள் மனதில் மாற்றம் உருவாகும். மாநில கட்சி வேறு, தேசிய கட்சி வேறு. பாஜக, காங்கிரஸ் தேசிய கட்சிகள். தவெக உருவாகி இரண்டரை ஆண்டு தான் ஆகிறது. சின்னம் கிடைத்து 2 மாதங்களில் வெற்றி பெற்றுள்ள வரலாறு வேறு.

நாளை என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்த பார்க்க வேண்டும். தேசியளவில் தலைவர் முன்னணி தலைவராக உருவாகி வருகிறார். அவரின் திட்டங்கள், எண்ணங்கள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை யாராவது நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என இப்படி சொல்லியிருக்கிறார்களா. அதை துணிந்து செயல்படுத்தவும் செய்கிறார். அதனால் கருத்து கணிப்பை பற்றி எல்லாம் கவலை இல்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+