Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொந்த கட்சி கவுன்சிலர்களுடனே மோதல்.. தேர்தலில் நடந்த திருப்பம்.. கோவை மேயர் ராஜினாமா.. பரபர பின்னணி!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாநகராட்சி திமுக மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநகராட்சி ஆணையரிடம் தனது உதவியாளர் மூலம் ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். கோவை மேயர் ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் அலையடிக்கின்றன.

மருத்துவ காரணங்களுக்காக மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக, கல்பனா ஆனந்தகுமார் தனது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்திருந்தாலும், திமுகவில் உட்கட்சி கவுன்சிலர்கள் மத்தியில் மோதல் மற்றும் திமுக தலைமையின் அதிருப்தி காரணமாகவே பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Coimbatore mayor dmk

கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றியது. அதில், 73 வார்டுகளில் திமுக நேரடியாக வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, திமுக சார்பில் மேயர் ஆகப்போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக்கின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி, கோவை புறநகர் கிழக்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் நிவேதிதா, 46வது வார்டு கவுன்சிலர் மீனா லோகு ஆகியோர் மேயர் ரேஸில் இருந்தனர்.

ஆனால், பெரிதாக யாரும் எதிர்பார்க்காத வகையில் 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார், கோவை மேயர் வேட்பாளராக திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டு, கோவை மேயர் பதவிக்கு ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் கோவை மாநகராட்சியின் முதல் திமுக மேயர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

Coimbatore mayor dmk

கல்பனா ஆனந்தகுமார், மணியக்காரன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர். கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார். அப்பகுதி திமுக பொறுப்பாளராக உள்ளார். கல்பனா ஆனந்தகுமார், அப்பகுதியில் இ -சேவை மையம் நடத்தி வந்தார். செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் என்பதால் கல்பனாவுக்கு மேயர் பதவி கிடைத்தது.

மேயராகப் பொறுப்பேற்ற பிறகு திமுக கவுன்சிலர்கள் மத்தியிலேயே கல்பனாவுக்கு எதிராக அதிருப்திகள் நிலவின. பல்வேறு இடங்களில் கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் பணம் கேட்டதாகவும், மேயர் கல்பனா டெண்டர்களில் கமிஷன் பெறுவதாகவும் புகார்கள் எழுந்தன.

கல்பனா, கோவை மேயராக தேர்வு செய்யப்பட்ட பிறகு ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு இல்லம் ரூ.1 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டது. அதுவே பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், மேயர் கல்பனா அங்கு குடியேறிய நிலையில் வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பதாகச் சொல்லி அங்கு தங்காமல் மணியகாரம்பாளையம் பகுதிக்கே சென்றார். இது பெரும் விவாதமாக மாறியது.

மணியகாரன்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே வசிக்கும் சரண்யா என்பவரை காலி செய்ய வைக்க தொடர்ச்சியாக பல்வேறு தொல்லைகள் கொடுத்து வந்ததாகவும், வீட்டை காலி செய்ய வைப்பதற்காக அழுகிய பொருட்களை வீசுவதாகவும், சிறுநீரை பிடித்து ஊற்றுவதாகவும் புகார் எழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் இருந்து அனுப்பப்படும் கோப்புகள் அனைத்தையும் மேயர் கல்பனா உள்நோக்கத்துடன் நிறுத்தி வைப்பதாகவும், தனிப்பட்ட வன்மத்துடன் மேயர் கல்பனா செயல்படுவதாகவும் கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனாலோகு குற்றம்சாட்டினார். இது தொடர்பான புகார் தலைமைக்கும் சென்றது.

மேலும், கோவை மாநகராட்சி ஆணையளர்களாக செயல்பட்டவர்களுடனும், அதிகாரிகளுடனும் மேயர் கல்பனா மோதல் போக்கை கடைபிடித்து வந்ததாக அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்தன. டெண்டர்கள் தொடர்பாகவும் சலசலப்புகள் நிலவி வந்தன.

மேலும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் கோவை மேயர் என்ற மிகப்பெரிய பொறுப்பை வகிக்கும் கல்பனா சிறப்பாகப் பணியாற்றவில்லை எனவும், அவரது வார்டிலேயே பாஜக கூடுதல் வாக்குகள் வாங்கியதாகவும் புகார்கள் எழுந்தன.

தொடர்ந்து கோவை மாமன்ற உறுப்பினர்களுடனும், அதிகாரிகளுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்ததால் மேலிடத்திற்கு அடுத்தடுத்து புகார்கள் சென்றது. மேயர் கல்பனாவின் நடவடிக்கைகளால் அமைச்சர் கே.என்.நேரு, கோவை பொறுப்பு அமைச்சர் முத்துசாமி ஆகியோரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

இதையடுத்து கோவை மேயரை மாற்ற திமுக தலைமை முடிவு செய்துள்ளது. யாரை அடுத்து கோவை மாநகராட்சி மேயர் ஆக்கலாம் என தேர்வு செய்யும் நடவடிக்கையிலும் திமுக தலைமை இறங்கியதாக தெரிகிறது.

இந்நிலையில் சென்னை சென்று முக்கிய நிர்வாகிகளை பார்த்து கோவை மேயர் கல்பனா மற்றும் அவரது கணவர் ஆனந்தகுமார் ஆகியோர் சமாதானம் செய்ய முயற்சித்ததாகவும், ஆனால் மேலிடத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து மேயர் கல்பனா தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே கல்பனா ஆனந்தகுமாரிடம் கட்சி தலைமை ராஜினாமா கடிதம் எழுதி வாங்கியதாகவும், அவர் பதவி விலக உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில், இன்று கல்பனா ஆனந்தகுமார் மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இந்த நிகழ்வு கோவை திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+