மனைவியின் அப்பல்லோவுக்கு பதில் ராம் சரண் கோவை கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
கோவை : தனது மனைவிக்கு சொந்தமான அப்பல்லோ மருத்துவமனையை விட்டு விட்டு, தெலுங்கு நடிகர் ராம் சரண் ஏன் கோவை கங்கா மருத்துவமனையை கை மணிக்கட்டு அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்தார் என்று பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சென்னையில் உள்ள புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையான அப்பல்லோ மருத்துவமனையின் உரிமையாளர் பிரதாப் ரெட்டியின் பேத்தி தான் நடிகர் ராம் சரணின் மனைவி.அதாவது தெலுங்கில் புகழ் பெற்ற நடிகரான சிரஞ்சீவி தான் அப்பல்லோ மருத்துவமனையில் உரிமையாளர் பிரதாப் ரெட்டியின் சம்மந்தி ஆவார். ஆனால் தனது மனைவிக்கு சொந்தமான அப்பல்லோ மருத்துவமனையை விட்டு விட்டு, தெலுங்கு நடிகர் ராம் சரண் ஏன் கோவை கங்கா மருத்துவமனையை கை மணிக்கட்டு அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்தார் என்று பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது பற்றி முத்து கிருஷ்ணன் என்பவர் வெளியிட்ட பதிவில் நடிகர் ராம் சரண் தனது மணிக்கட்டு அறுவை சிகிச்சைக்காக கோவையைச் சேர்ந்த கங்கா மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்ததற்காக, சிலர் அப்போலோ மருத்துவமனையைக் கேலி செய்து வருகின்றனர்.
அப்போலோவைக் கேலி செய்ய வேண்டிய அவசியமில்லை;
கங்கா மருத்துவமனையைப் பற்றி நாம் இன்னும் அதிகம் புரிந்து கொள்ள வேண்டும்.
கோவையில் உள்ள கங்கா மருத்துவமனை, எலும்பியல் (Orthopaedics), அதிர்ச்சி சிகிச்சை (Trauma), கை மற்றும் மணிக்கட்டு அறுவை சிகிச்சை, மற்றும் மைக்ரோ சர்ஜரி (Microsurgery) ஆகியவற்றிற்கான தெற்காசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரத்யேக சிறப்பு மையங்களில் ஒன்றாகும்.
அதனால்தான், தனது மனைவி உபாசனாவின் குடும்பத்திற்கு அப்போலோ மருத்துவமனையுடன் தொடர்புகள் இருந்தபோதிலும், ராம் சரண் தனது சிக்கலான மணிக்கட்டு அறுவை சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்தார்.
இத்தகைய அறுவை சிகிச்சைகளில் கங்கா மருத்துவமனை நிகரற்ற நிபுணத்துவம் பெற்றுள்ளது.
எலும்பியல், அதிர்ச்சி சிகிச்சை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சைத் துறையின் தலைவர் டாக்டர் எஸ். ராஜசேகரன், எலும்பியல் அறுவை சிகிச்சைத் துறையில் பங்களித்த உலகின் முதல் 1% சிறந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தால் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளார்.
கங்கா மருத்துவமனை மிகவும் சிக்கலான கை மற்றும் மூட்டு தொடர்பான சிகிச்சைகளை அதிக அளவில் கையாண்டு, உலகத்தரம் வாய்ந்த முடிவுகளைத் தருகிறது" இவ்வாறு டி முத்துக்கிருஷ்ணன் கூறியுள்ளார். அந்த பதிவினை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
