மேட்டுப்பாளையத்தில் ஒரே டென்ஷன்.. "தொக்கா" சிக்கிய சபலிஸ்ட்.. அந்த பொண்ணு விடலையே.. இதுல வீடியோ வேற
கோவை: மேட்டுப்பாளையம் பஸ்ஸில் நடந்த சம்பவம்தான் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. அப்படி என்ன நடந்தது? அது என்ன வீடியோ?
கோவையை சேர்ந்த இளம்பெண்.. மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்... இதனால் தினமும் மேட்டுப்பாளையத்துக்கு பஸ்ஸில்தான் சென்று வருகிறார்.
நேற்றைய தினம் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு, ஆபீஸில் இருந்து வீட்டுக்கு போக பஸ்ஸில் ஏறினார்.. கோவை செல்லும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.. அவருக்கு பக்கத்தில், ஒரு நபர் உட்கார்ந்திருந்தார்.. இந்த பெண்ணை பார்த்ததும், அசிங்கமான செய்கைகளை காட்ட துவங்கினார். அவருக்கு 50 வயது இருக்குமாம்.

ஆபாசம்: ஆபாச சைகையை காட்டியதும், முதலில் இந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், கோபத்தை அடக்கிக் கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார்., இதை பார்த்த அந்த நபருக்கு இன்னும் குஷியாகி விட்டது.. அதனால், இந்த முறை, சற்று துணிச்சலாகவே ஆபாச செய்கையை காட்ட துவங்கினார்.
மறுபடியும் மறுபடியும் அந்த பெண்ணிடம், ஆபாச செய்கையை காட்டவும், கொந்தளித்துவிட்டார் அந்த பெண்.. பஸ்ஸில் அத்தனை பேர் முன்பும், எழுந்து நின்று, அந்த நபரை கண்டித்தார்.. கடுமையான எச்சரிக்கையையும் விடுத்தார்.. அப்போதுதான், பஸ்ஸில் இருந்தவர்களுக்கு விஷயமே புரிந்தது.. உடனே, பெண்ணுக்கு ஆதரவாக குரல் எழுப்ப துவங்கினர்.. மொத்த பேரும் ஒன்று சேர்ந்துவிடவும், அந்த நபர் நைஸாக அங்கிருந்து நழுவ முயன்றார். ஒருகட்டத்தில் பஸ்ஸில் இருந்து திடீரென இறங்கினார்.
பேத்தி வயசு: ஆனால் அந்த பெண் விடவில்லையே. பின்னாடியே, இந்த பெண்ணும், பஸ்சில் இருந்து கீழே குதித்தார்.. அந்த நபரின் சட்டையை பிடித்து, அவரை சுற்றி வளைத்து இழுத்து நிறுத்தினார்.. "உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? எனக்கு உன் பேத்தி வயசுதானே இருக்கும்? என்கிட்ட போயி இவ்ளோ அசிங்கமாக நடந்துக்கிறியே? உன் பொண்டாட்டி போன் நம்பர் குடு.. உன் பசங்க போன் நம்பர் குடு.. நீ செய்த காரியம் அவங்களுக்கும் தெரியட்டும்" என்று லெப்ட் & ரைட் வாங்கினார்.
இதையெல்லாம் அந்த ஆபாச பேர்வழி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. போன் நம்பரையும் தர மறுத்துவிட்டார்.. எவ்வளவு கேட்டும் அந்த நபர் போன் நம்பர் தராததால், இந்த பெண் ஆத்திரமடைந்து, செருப்பை கழற்றி அந்த நபரை சரமாரியாக வெளுத்தார்.. சுற்றி நின்ற பொதுமக்களும் சேர்ந்து அந்த நபருக்கு தர்மஅடி கொடுத்தனர்...
மருத்துவமனை: அதற்குள் மேட்டுப்பாளையம் போலீசுக்கு விஷயம் தெரிந்து அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.. மொத்த பேரிடம் சிக்கியிருந்த அந்த நபரை மீட்டனர். பொதுமக்கள் தாக்கியதில் லேசான காயமும் ஏற்பட்டிருந்தது-. இதையடுத்து, அவரை போலீசார் மேட்டுப்பாளையம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, முதலுதவி சிகிச்சை தந்தனர்.. பிறகு மறுபடியும், மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அந்த நபரை அழைத்து சென்று விசாரித்தனர்.
ஆனால் இவ்வளவு நடந்தும்கூட, அந்த 50 வயது நபரின் குடும்பத்தை நினைத்து, அவர்மீது புகார் அளிக்க அந்த பெண் மறுத்துவிட்டாராம்.. எனவே, அந்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.. இதற்கிடையே, ஓடும் பஸ்சில் இளம்பெண், அந்த நபரை செருப்பால் அடித்ததை, பஸ்ஸுக்குள்ளிருந்து யாரோ சிலர் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு விட்டனர்.. அந்த செருப்படி வீடியோதான், இப்போது பரவி கொண்டிருக்கிறது.
குன்னூர் பஸ்: இப்படித்தான் கடந்த மாதமும், ஊட்டி பஸ்ஸில் இரவு நேரத்தில் ஒரு அக்கிரமம் நடந்தது.. மேட்டுப்பாளையம் - ஊட்டி பஸ்ஸில் ஏறிய ஒரு பெண் போலீஸ் குன்னூருக்கு சென்றுள்ளார். அவர் உட்கார்ந்திருந்த சீட்டுக்கு பின்புறமிருந்து ஒருநபர் சில்மிஷம் செய்ய தொடங்கினார்... இதனால் அதிர்ச்சி அடைந்து அந்த பெண் போலீஸ், அவரை கண்டித்துள்ளார்..
கைது: உடனே அந்த நபர், "நான் யார் தெரியுமா? பெரிய பெரிய ஆபீசர்களை எல்லாம் எனக்கு தெரியும், என்னை யாரும் ஒன்னும் செய்ய முடியாது, எனக்கு எஸ்பி தெரியும், டிஎஸ்பி தெரியும் என்றெல்லாம் அளந்து விடவும், கடைசியில் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து குமுறி எடுத்து, போலீசில் கொண்டு போய் அவரை ஒப்படைத்தனர்.. அப்போதுதான் தெரியவந்தது, 56 வயதான அந்த நபர், ஒரு முன்னாள் ராணுவ வீரராம்..!!!












Click it and Unblock the Notifications