எம்பி ஆகும் பிக் பாஸ்? அதிமுக - பாஜக கூட்டணி முறிவால் கமல்ஹாசன்தான் செம குஷி.. ஏன்? நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: அதிமுக - பாஜக கூட்டணி முறிவால் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஏக மகிழ்ச்சியில் இருக்கிறாராம். இந்த மகிழ்ச்சிக்கு பின் முக்கியமான காரணம் உள்ளதாம்.

கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. ஒரு சில நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை தவிர மாநகராட்சி எதிலும் அதிமுக வெற்றிபெற முடியவில்லை. பாஜகவும் வெற்றிபெற முடியவில்லை. முக்கியமாக கோவையில் 10 இடங்களில் 10க்கு 10 என்று எம்எல்ஏ சீட்டுகளை வென்ற அதிமுக - பாஜக கூட்டணியால் மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை.

காரணம் இவர்களின் கூட்டணி முறிவு. இந்த தேர்தலை இரண்டு கட்சிகளும் தனி தனியாக எதிர்கொண்டன. இதனால் அதிமுக - பாஜக வாக்குகள் பிரிந்தன. எதிர்க்கட்சி வாக்குகள் சிதறி.. அது திமுகவிற்கு பெரிய சாதகமாக மாறியது. கொங்கு மண்டலம் அதிமுக - பாஜக வலிமையாக இருக்கும் மண்டலம் ஆகும். ஆனால் இந்த மண்டலத்தில் கூட ஒரு மாநகராட்சியை கூட அதிமுக - பாஜகவால் பிடிக்க முடியவில்லை. இவர்கள் கூட்டணி முறிவு அந்த அளவிற்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தெரிந்தது. அப்போது அந்த கூட்டணி முறிவு ஒரு தேர்தலுக்கான முறிவு என்று கூறப்பட்டது.

Why is Kamal Haasan happy for the break between AIADMK and BJP?

கூட்டணி ஓவர்: எங்கள் பலத்தை சோதித்து பார்க்க போகிறோம் என்று அண்ணாமலை கூறிவிட்டு கூட்டணியை முறித்தார். கிட்டத்தட்ட 5 சதவிகித வாக்குகளை பாஜக வாங்கியது. இந்த நிலையில்தான் தற்போது அவர்கள் கூட்டணி மொத்தமாக முறிந்து உள்ளது. இந்த கூட்டணி முறிவு தொடர்பாக 4 விஷயங்கள்தான் அதிக கவனம் பெற்றுள்ளது.

1. அதிமுக புதிய கூட்டணி அமைக்க போவதாக அறிவித்து உள்ளது. 2 பாஜக தலைமையில் இன்னொரு புதிய கூட்டணி உருவாக்கலாம். 3. அதிமுக - பாஜக 2024ல் தேர்தலை ஒன்றாக சந்திக்காது. 4. கடைசியாக 2026 தேர்தலிலும் இவர்கள் கூட்டணி வைக்க மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

( நான் ஜெயித்து காட்டுறேன்.. என்னை நம்புங்கள்.. டெல்லியில் சொன்ன அண்ணாமலை.. வந்த விழுந்த ஷாக் பதில் )

அதனால் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த அதிமுக - பாஜக கூட்டணி முறிவால் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஏக மகிழ்ச்சியில் இருக்கிறாராம். இந்த மகிழ்ச்சிக்கு பின் முக்கியமான காரணம் உள்ளதாம்.

மகிழ்ச்சிக்கு காரணம்: திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணையும் வாய்ப்பு உள்ளது. மக்கள் நீதி மய்யம் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக உள்ளது. மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஏற்கனவே காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டார். அதன்பின் திமுகவிற்கு பல்வேறு இடங்களில் ஆதரவாக பேசி உள்ளார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சருடன் நட்பாக உள்ளார். சினிமா ரீதியாக விக்ரம் படத்தில் தொடங்கிய நட்பு அரசியல் ரீதியான நட்பாகவும் மாறி உள்ளது.

( அண்ணாமலை இல்லாமல்.. கேசவ விநாயகம் மீட்டிங் போட்டது ஏன்? )

இதற்கு இடையில்தான் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூரில் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதன்படி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் ஆலோசித்த மநீம தலைவர் கமல்ஹாசன், கோவையில் போட்டியிட உள்ளதாக உறுதி செய்திருக்கிறார். மேலும், கூட்டணிக்கு அழைப்பிதழ் ரெடியாகிவிட்டது என்றும் கூறி உள்ளார். அவர் கோவையில் போட்டியிடும் பட்சத்தில் அண்ணாமலை கமல்ஹாசன் இடையே கோவையில் பலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாமலை கமல்ஹாசன் இடையே கோவையில் தேர்தல் மோதல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. பாஜக சார்பாக இங்கே அண்ணாமலை களமிறக்கப்படலாம் என்பதால்தான் இந்த தேர்தல் அதிக கவனம் பெற்றுள்ளது.

அதிமுக கூட்டணி: ஆனால் அதிமுக கூட்டணி இல்லாமல் அண்ணாமலையால் கோவையில் வெல்வது என்பது கடினம். ஏனென்றால் அதிமுக கூட்டணியின் மூத்த தலைவர் வானதி சீனிவாசன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் கோவை தெற்கில் தனியாக கூட்டணி இல்லாமல் நின்ற கமல்ஹாசனை வென்றார். அப்படி இருக்க.. அதிமுக கூட்டணி இல்லாமல் அண்ணாமலை கமல்ஹாசனை.. வெல்வது என்பது.. அதுவும் கமல் திமுக கூட்டணியில் இருக்கும் போது வெல்வது என்பது கடினமான காரியம். இந்த கூட்டணி முறிவால்.. அதிமுகவில் யாரெல்லாம் மகிழ்ச்சியில் இருக்கிறார்களோ இல்லையோ.. மநீமவில் கமல்ஹாசன் கண்டிப்பாக மகிழ்ச்சியில் இருப்பார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+