அண்ணாமலை இல்லாமல்.. கேசவ விநாயகம் மீட்டிங் போட்டது ஏன்? "அவர்" தலைவரே இல்லையாமே.. முடங்கிய அதிகாரம்?
சென்னை: எல்லா மாநிலத்திலும் பாஜகவை கட்டுப்படுத்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் இருப்பார், இங்கே கேசவ விநாயகம் இருக்கிறார், இங்கே கேசவ விநாயகம்தான் கட்சியை நடத்துகிறார் என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் உள்ள நிலையில் பாஜக உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் கமலாலயத்தில் கேசவ விநாயகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசப்பட்டது என்ன என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அண்ணாமலை இல்லாமல் இங்கே கேசவ விநாயகம் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த கூட்டத்தை கேசவ விநாயகம் நடத்துகிறார் என்றால் ஆர்எஸ்எஸ் இதை நடத்துகிறது என்று அர்த்தம். பல வழக்கு உள்ள ரவுடியை கட்சியில் சேர்த்துள்ளனர். அவரை எப்படி சேர்த்தனர் என்று தெரியவில்லை என்று அண்ணாமலை கூறுகிறார். தலைவராக இருக்கும் அவர் எப்படி தெரியாது என்று கூற முடியும். அவர் என்ன கட்சி நடத்துகிறார்? அப்போ யார் கட்சி நடத்துகிறார்? கேசவ விநாயகம்தான் கட்சியை நடத்துகிறார்.
எல்லா மாநிலத்திலும் பாஜகவை கட்டுப்படுத்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் இருப்பார். இங்கே கேசவ விநாயகம் இருக்கிறார். அவர்தான் நேற்று கூட்டத்தை நடத்தியது. கட்சி நிர்வாகிகள் எண்ணத்தை கேட்க.. அண்ணாமலை டெல்லியில் இருக்கும் சமயத்தில் கேசவ விநாயகம் நடத்தி உள்ளார். இந்த கூட்டம் உயர்மட்ட கூட்டம் இல்லை. ஆனாலும் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர். கட்சி நிர்வாகிகள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு மேலிடத்தில் தெரிவிக்க இந்த கூட்டத்தை நடத்தி உள்ளனர்.

இதை பற்றி டெல்லிக்கு அவர்கள் ரிப்போர்ட் அனுப்புவார்கள். இடைப்பட்ட காலத்தில் இவர்கள் மோடியை தாக்க மாட்டார்கள். அவர்களும் அதிமுகவை தாக்க மாட்டார்கள். அதிமுக - பாஜக சேரவே அதிக வாய்ப்பு உள்ளது. பல குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. இவர்கள் கூட்டணி முறிய வேறு எதோ ஒரு காரணம் உள்ளது. கூட்டணியை முறித்தால் பாஜக இறங்கி வரும். குறைந்த இடங்களை கூட்டணியில் கொடுக்கலாம் என்று நினைக்க வாய்ப்பு உள்ளது. 2024 தேர்தல் வரை மட்டுமே இந்த கூட்டணி.
2026ல் அதிமுக தனியாக நிற்கவே விரும்பும். கூட்டணி வந்தாலும் இதுவே நிலைமை. 2024ல் மீண்டும் மோடி வந்தால் அதிமுகவிற்கு பிரச்சனை. அதனால் இப்போது கூட்டணி வைப்பார்கள். இப்போது திமுகவிடம் இருந்து தங்களை காப்பதே பாஜகதான் என்பது எடப்பாடிக்கு தெரியும். அதனால்தான் பாஜகவை விமர்சனம் செய்ய கூடாது என்று எடப்பாடி கூறியுள்ளார். இல்லையென்றால் மாநிலத்தில் உள்ள வழக்குகளில் ஆளுநர் கையெழுத்து போடுவார். எடப்பாடிக்கு எதிராக தமிழ்நாடு அரசு ஆக்சன் எடுக்க அனுமதி கொடுப்பார்.
அதனால் இதையெல்லாம் தடுக்க பாஜகவை எடப்பாடி வெளிப்படையாக கடுமையாக எதிர்க்க மாட்டார். எடப்பாடி ஒரு கேம் ஆடுகிறார். அதில் ஜெயிப்பாரா என்று பார்க்க வேண்டும். பாஜகவிற்கு குறைவாக இடம் கொடுக்க வேண்டும் என்று அவர் இப்படி செய்கிறார். சீட்டு பிரச்சனை மட்டும் காரணமா அல்லது வேறு எதுவும் இதற்கு பின் காரணமாக இருக்கிறதா என்று தெரியவில்லை. என்ன நடந்தது? எடப்பாடி கூட வேறு எதையோ நினைத்து கூட்டணியை உடைத்துள்ளார். கூட்டணி உடைந்ததற்கான வேறு ஏதோ காரணம் உள்ளது. அமித் ஷா - எடப்பாடி பேசியது என்ன என்று தெரியவில்லை.
பாஜக தேசிய தலைமை என்ன முடிவு எடுக்கிறது. இனி என்ன நடக்கிறது என்பதை காத்திருக்க பார்க்க வேண்டும். அண்ணாமலை நினைத்ததை விட இங்கே பிரச்சனை காரசாரமாக செல்கிறது. சுமுகமாக சென்றதை கெடுத்துவிட்டீர்கள் என்று அண்ணாமலைக்கு எதிராக டெல்லி கருதுகிறது என்று பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications