ஜனநாயகன் படத்துக்காக சிஎம் கிட்ட லீவ் சொல்லியாச்சு.. அமைச்சர் விக்னேஷ்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அரசியல் களம் அடியோடு மாறியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. அதிரடி மாற்றங்களும், சர்ச்சைகளும் சேர்ந்து வருகின்றன. முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் வருகிற 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஜனநாயகன் படம் பார்ப்பதற்காக விஜய்யிடம் லீவ் கேட்டுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

கோவையில் அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "திமுக, அதிமுக உருவாக்கி வைத்துள்ள டாஸ்மாக் துறையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ரோட்டிற்கு முன்பு படுத்திருப்பது, பாட்டில், டம்ளர் பரவி கிடப்பது போன்ற நிலை இருக்கிறது. இதை மாற்றி சீரமைக்க வேண்டும். இதே நிலை தொடரக் கூடாது என்று நினைக்கிறோம். எப்படி சீரமைப்பது என்பதை பற்றி கலந்தாலோசனை செய்தோம்.

i-have-asked-leave-for-jananayagan-movie-release-said-minister-vignesh

ரெஸ்ட்ரோ பார்

அதில் ஒரு சிலர் ரெஸ்ட்ரோ பார் கொண்டு வரலாம் எனவும், சிலர் தனியார்மயமாக்கிவிடலாம் என்றும் கூறுகிறார்கள். சிலர் டாஸ்மாக்கிலேயே தனியாருக்கு நிகரான கட்டமைப்பை கொண்டு வருவோம் என்று கூறியுள்ளனர். இதைப்பற்றி ஆலோசனை நடந்தபோது, ரெஸ்ட்ரோ பார் என்பதை மட்டும் யாரோ கேட்டு வெளியில் பரப்பி வருகிறார்கள். மக்கள் மனநிலை எப்படி இருக்கிறதோ அதை மட்டும் தான் அரசு பிரதிபலிக்கும்.

வருமானத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே இந்தத்துறையை அரசு வைத்துக் கொள்ளும் என்று யாரும் நினைக்க வேண்டாம். அப்படி நினைத்து விமர்சனம் செய்தால் எதிர்க்கட்சிகள் ஏமாற்றமடைவீர்கள். எங்களுக்கு அப்படிப்பட்ட எண்ணம் இல்லை. துறையை சீரமைப்பதற்கான ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதைத் தனியாருக்கு விடலாமா, அரசே நடத்துவதா என்பதுதான் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஜனநாயகன் ரிலீஸ்

தனியாருக்கு சென்றால் சொந்த கட்சியினருக்கே பார்களை வழங்கி, அதன் மூலம் சம்பாதித்து பார்டி பண்ட் வாங்குவது எங்கள் கட்சியில் நடக்காது. இவர்களே ஆட்களை போட்டு செய்வது தவெகவில் நடக்காது. சட்டப்படி தான் செயல்படுவோம். சட்டமன்றத்தில் டாஸ்மாக் பற்றி எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயார். வருகிற 23 ஆம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். எல்லோரும் பெரிய இடத்தில் இருக்கிறீர்கள் என்று முதலமைச்சர் கேட்டுள்ளார்.

படம் பார்க்கும் 3 மணி நேரம் மட்டும் தலைவரின் பழைய ரசிகர்களாக செயல்பட அவரிடம் அனுமதி கேட்டுள்ளோம். இப்போதுவரை அனுமதி வழங்கவில்லை. இதற்கு பிறகு எங்கள் தலைவரின் படத்தை முதல்நாளாக காத்திருந்து அதிகாலை எப்போது பார்க்க முடியும். ஜனநாயகன் படத்திற்காக நான் லீவ் போட்டுள்ளேன். கோவை போத்தனூரில் உள்ள திரையரங்கில் ஜனநாயகன் படம் பார்க்க திட்டமிட்டுள்ளேன்" என்றார். அமைச்சரின் இந்த பேட்டி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+