Curry Leaves: கறிவேப்பிலை இலை கருகாமல் ஃபிரஷ்ஷாக வைத்திருப்பது எப்படி? இந்த டிப்ஸ்ஸை பாலோ செய்ங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கறிவேப்பிலையை ஃபிரஷ்ஷாக வைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம். என்னதான் கவர்களில் போட்டு வைத்தாலும் இரு நாட்களில் கருப்பாகி விடுவதால் பயன்படுத்த முடியாமல் வீணாகி போகிறது.

கறிவேப்பிலை என்பது சமையலுக்கு மட்டுமில்லை , ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலை முடி வளர்ச்சிக்கு நல்லது. ரத்தத்தை சுத்திகரிக்கும். ஜீரணத்திற்கு நல்லது, ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கும். அது போல் இதயத்திற்கும் நல்லது.

Curry Leaves

அது போல் கண்பார்வையை மேம்படுத்தும், ரத்த சோகை நோய் வராமல் பாதுகாக்கும். கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

இந்த கறிவேப்பிலையை நாம் தினந்தோறும் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம். ஆனால் பலர் அந்த கறிவேப்பிலையை அப்படியே எடுத்து தூர எறிந்துவிடுவார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கு கறிவேப்பிலையை அரைத்து கொடுக்க வேண்டும். அதாவது கறிவேப்பிலை துவையல், கறிவேப்பிலை சாதம், கறிவேப்பிலை குழம்பு உள்ளிட்டவைகள் மூலம் கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்ளலாம்.

அத்துடன் கறிவேப்பிலையை காய வைத்து இட்லி பொடி, எள்ளு பொடி உள்ளிட்டவைகளுடனும் ரசப் பொடி, சாம்பார் மிளகாய் தூளிலும் காயவைத்து சேர்க்கலாம்.

குறிப்பாக அசைவ உணவுகள் சாப்பிடும் போது இந்த கறிவேப்பிலையை அதிகம் பயன்படுத்த வேண்டும். இந்த கறிவேப்பிலையை கொண்டு சிலர் மிட்டாய் தயாரிக்கிறார்கள்.

இப்படிப்பட் கறிவேப்பிலை கடைகளில் இலவசமாகவே கொடுக்கப்படுகிறது. பலரது வீடுகளில் செடி வைத்திருப்பார்கள். ஆனால் பலருக்கு ஒரே கவலை, கறிவேப்பிலையை வாங்கி வைத்தால் 2 நாட்களுக்குள் கருத்து விடுகிறதே என்பதுதான்.

கறிவேப்பிலையை எப்படி பிரஷ்ஷாக வைத்திருப்பது என்பதை பார்க்கலாம். கறிவேப்பிலை சீக்கிரம் கருத்து போக காரணம், அதில் உள்ள ஈரப்பதம்தான். இலைகளைக் கழுவிய பிறகு சரியாக காய வைக்காமல் அப்படியே ஈரத்துடன் பிரிட்ஜில் வைத்தால் அந்த ஈரத்திலேயே அழுகிவிடும்.

கறிவேப்பிலையை காம்பில் இருந்து பறித்து நன்கு கழுவி காய வைங்க. பிறகு ஒரு ஏர் டைட் டப்பாவில் டிஷ்யூ பேப்பரை வைத்து அதன் மேல் கறிவேப்பிலை இலைகளை போடுங்கள். அதன் மேல் மற்றொரு டிஷ்யூ பேப்பரை வைத்து மூடினால் ஃபிரஷ்ஷாகவே இருக்கும்.

இலைகளை கழுவியதும் ஒரு தவாவில் 1 முதல் 2 நிமிடங்கள் வரை வதக்கிவிட்டு டப்பாவில் போட்டு வைத்தாலும் நன்றாக இருக்கும். டப்பாவை வைக்க முடியாவிட்டால் டிஷ்யூ பேப்பரில் வைத்து ஜிப் லாக் கவரில் வைத்துக் கொள்ளுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+