லூலூ மாலே ஆடிப்போயிடுச்சே.. பொருள் வாங்க போனவர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. கோவையில் நடந்த சம்பவம்?

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை லூலூ ஹைப்பர் மாலில் தற்போது கொடுக்கப்பட்டு உள்ள ஆபர் மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆபர் காரணமாக அங்கே நடந்த சம்பவம் ஒன்றும் கவனம் பெற்றுள்ளது.

ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் அரசு முறை பயணமாக துபாய் சென்றார். துபாயில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்புகளை மேற்கொண்டார். துபாயில் நடந்த உலக அளவிலான எக்ஸ்போவில் தமிழ்நாட்டின் அரங்கை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது . தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு முதலீடுகள் இந்த பயணத்தின் போது ஈர்க்கப்பட்டது.

lulu mall

ஒப்பந்தம்: இந்த பயணத்தின் ஒரு கட்டமாக லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்தது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் உணவு பதனிடும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. கிட்டத்தட்ட 3000 ஆயிரம் பேருக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் இரண்டு மால்களை அமைக்கவும் லூலூ நிறுவனம் முடிவு செய்ததாக கூறப்பட்டது.

இதற்காக லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைவர் யூசுப் அலி முஸலிமான் வீட்டில் அப்துல் காதருடன் முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்திப்பு நடத்தினார். இதை தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கேரளா மற்றும் பெங்களூரில் மட்டுமே அதிகமாக கவனம் செலுத்தி வந்த அந்த நிறுவனம் தமிழ்நாடு பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளது. இவர்கள் ஏற்கனவே கேரளா, பெங்களூரில் மால்களை வைத்து உள்ளனர்.

எங்கே வருகிறது; தமிழ்மட்டில் லுலு குழுமம், ஷாப்பிங் மால்கள், ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவு பாதுகாத்தல் போன்றவற்றை அமைக்க ரூ.3,500 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளன. கோவையில் ஏற்கனவே முதல் கட்டமாக ஹைப்பர் மால் திறக்கப்பட்டு உள்ளது.

ஹைப்பர் மால்; அந்த வகையில் கோவை லூலூ ஹைப்பர் மாலில் தற்போது கொடுக்கப்பட்டு உள்ள ஆஃபர் மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆபர் காரணமாக அங்கே நடந்த சம்பவம் ஒன்றும் கவனம் பெற்றுள்ளது.

நேற்று அங்கே மளிகை பொருட்களுக்கு 60% தள்ளுபடி கொடுக்கப்பட்டது. தற்போதும் இதே தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்கப்படுகிறது. இன்னும் பல பொருட்களுக்கு 50% வரை தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது.

மற்ற பொருட்கள் 30-40 சதவிகிதம் தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கே மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. அங்கே ஒரு மணி நேரத்திற்கு ஒரு ஆஃபர் என்ற திட்டம் உள்ளது. இதன் அடிப்படையில் தினமும் 1 மணி நேர இடைவெளியில் ஆஃபர் மாற்றப்பட உள்ளது. இதனால் அங்கே மக்கள் கூட்டம் அலைமோதிய படி உள்ளது.

ஜூலை 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை இந்த ஆபர்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் இந்த ஆஃபரானது மின்னனு சாதனங்களுக்கு அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்களும் வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+