விதம் விதமான ஹேர்ஸ்டைல்.. அசரடிக்கும் மேக்கப்.. ஆனால் அனிதாவின் வேலை என்ன தெரியுமா!
பேருந்துகளில் பிக்பாக்கெட் அடித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
Recommended Video

கோவை: ஃபுல் மேக்-அப், புது ஹேர்ஸ்டைல்.. என்று இருக்கும் அனிதாவை பார்த்தால் பிக்பாக்கெட் பேர்வழி என்றே தெரியவில்லை. ஆனால் உண்மை அதுதான்!
காரமடையை சேர்ந்த பெண்மணிதான் அனிதாதேவி. 33 வயதான இவர் கணவர் சிவக்குமாருடன் வசித்து வருகிறார். இவரது வேலையே பிக்பாக்கெட் தானாம். ஒன்றல்ல, இரண்டல்ல, 5 வருஷங்களாக அனிதாவுக்கு இந்த தொழில்தான். குறிப்பாக பஸ்தான் இவர் குறியே. எந்த பஸ் கூட்டமா இருக்கோ, அதிலதான் அனிதா ஏறிக் கொள்வார்.
[தெலுங்கானா தேர்தல்.. 2 லட்சம் இளைஞர்களை கூட்டி மாஸ் பேரணி நடத்த போகும் பாஜக!]

தனிப்படை அமைப்பு
நெரிசலை பயன்படுத்தி காரியத்தை கச்சிதமாக முடித்து விடுவார். ஒரு பொருளோ, பணமோ திருட்டு போய்விட்டால் பறிகொடுத்தவர் பக்கத்திலேயே இருக்கும் அனிதா மேல் சந்தேகமே வராது. அந்த மாதிரி நாசூக்காக நடந்து கொண்டிருக்கிறார். இதனால் யாராலுமே அனிதாவை பிடிக்கவே முடியவில்லை. பஸ்ஸில் நடக்கும் பிக்பாக்கெட்டை மட்டும் கண்டுபிடிக்கவே முடியாமல் யோசித்த போலீசாரும் இதற்காக ஒரு தனிப்படையும் அமைத்தார்கள்.

10 ஆயிரம் ரூபாய்
ஆனால் பலநாள் திருடன்தான் ஒருநாள் மாட்டிப்பானே... அந்த மாதிரி அனிதாவும் சிக்கி கொண்டார். உக்கடத்தில் இருந்து வடகோவைக்கு பஸ் ஒன்று சென்றிருக்கிறது. கூட்டம் நிறைந்திருந்தது என்பதால் அனிதா வழக்கம்போல் ஏறிக் கொண்டார். பஸ்சில் ஒரு பெண் பயணியிடம் 10 ஆயிரம் ரூபாயை லாவகமாக ஆட்டைய போட்டார். அப்போதுதான் அனிதா கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்.

கைதான அனிதா
இவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோதுதான் இவரது பிக்பாக்கெட் திறமையே முழுசாக வெளிப்பட்டது. காரணம், இந்த அனிதாவை ஏற்கனவே போலீசார் இதே பிக்பாக்கெட் கேசில் ஒருமுறை கைது செய்திருக்கிறார்கள். பெண்களிடம் நகை, பணம், செல்போன் இவைகளை 5 வருடமாகவே திருடி வந்திருக்கிறார்.

ஃபுல் மேக்-அப்
ஒருமுறை பிக்பாக்கெட் அடித்த பஸ்ஸில் திரும்பவும் அனிதா ஏறினால் சந்தேகம் வரும் என்று அடிக்கடி ப்யூட்டி பார்லர் போவாராம். அங்கு போய் வித வித ஹேர்ஸ்டைல்களை செய்து கொள்வாராம். புது ஹேர்ஸ்டைலில் மீண்டும் பஸ்ஸில் ஏறி தன் வேலையை பார்த்து வந்திருக்கிறார். அதோடு ஏற்கனவே கைதாகி உள்ளதால் போலீசாருக்கு தெரியக்கூடாது என்பதற்காக ஃபுல் மேக்கப் போட்டுக் கொண்டுதான் திருடுவாராம்.

சொகுசு வாழ்க்கை
இதுவரை பிக்பாக்கெட் அடித்த பணத்தை கொண்டு ஒரு மளிகை கடையே நடத்தியும் வந்துள்ளார். இக்கடைக்கு, பொருட்கள் வாங்குவதுபோல தினமும் கோவை வந்து செல்வாராம். இந்த லட்சணத்தில் அனிதா சுய உதவி குழு தலைவியாகவும் இருந்திருக்கிறார். இந்த பொறுப்பை வைத்துக் கொண்டு, வங்கிகளுக்கு சென்று லட்சக்கணக்கில் கடனையும் வாங்கி, அந்த பணத்தில் சொகுசோ சொகுசென்று வாழ்ந்து வந்திருக்கிறார்.

தொடர் விசாரணை
ஆனால் வங்கியில் வாங்கிய பணம் எங்கே என்று கேட்டு தொல்லை பண்ணவும்தான் 10 ஆயிரம் ரூபாயை ஆட்டைய போட்டதாக அனிதா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்த 10 ஆயிரம் ரூபாய் தவிர, அனிதா வேறு யாரிடமெல்லாம் பணம், நகை, பொருட்களை பிக்பாக்கெட் அடித்தார், அந்த பணத்தை கொண்டு என்னவெல்லாம் செய்தார் என்பது குறித்து தொடர் விசாரணை போய் கொண்டிருக்கிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications