மாட்டுக்கறி! கோவை அருண் சார் வேலையே இதுதான்.. பள்ளியை விட்டே ஓடிய மாஜி மாணவன் சரமாரி குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

கோவை: ''நீ மாட்டுக்கறி தின்கிறவன் தானே.. எனக்கு முன்னாடி எப்படி உட்காரலாம்'' அருண் சார் என்னிடம் கேட்டுள்ளார். அருண் சார் டார்ச்சர் தாங்க முடியாமல் நான் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன். அவர் தான் மாணவர்களின் ஜாதியை சொல்லி அசிங்கப்படுத்துவதற்கு முக்கிய காரணம்'' என்று கோவை அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் தலைமையாசிரியர் அருண் குமார் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கேகேநாயுடு என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் அகிலன் என்ற மாணவர் 11ம் வகுப்பு படித்து ந்தார். இவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். கடந்த 21ம் தேதி திடீரென்று அகிலன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

coimbatore 11th student akilan suicide

இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பள்ளியில் ஜாதியை சொல்லி மாணவன் அகிலனை ஆசிரியர்கள் அவமானப்படுத்தியது தான் தற்கொலைக்கு காரணம் என அவரது பெற்றோர் கூறினர்.

இதையடுத்து அகிலனுடன் படித்த 2 மாணவர்கள், வகுப்பாசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமையாசிரியர் அருண் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருவரும் சஸ்பெண்ட் செய்யப்படடுள்ளனர். வகுப்பாசிரியர் விஜயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். ஆானல் தலைமையாசிரியர் அருண் குமார் இன்னும் கைது செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பாக புகார் அளித்தபோதே அருண் குமார் நடவடிக்கை எடுத்து இருந்தால் அகிலன் தப்பித்து இருப்பார். ஆனால் அருண் குமார் அலட்சியம் காட்டினார். இதனால் அவரையும் கைது செய்ய வேண்டும் என்று அகிலன் குடும்பத்தினர் கூறி வருகின்றனர். அவரை கைது செய்தால் தான் அகிலன் உடலை வாங்குவோம் என்று கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் முன்னாள் மாணவர் ஒருவர் தலைமையாசிரியர் அருண் குமார் மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுபற்றி அந்த மாணவன் கூறியதாவது:

''நான் அருண் சாரிடம் தான் படித்தேன். ஜாதியை வைத்து ஒருவரை 'ஹார்னரிங்' செய்வது, ஜாதியை சொல்லி அசிங்கப்படுத்துவது, பசங்களுக்கு நடுவே ஜாதி சண்டையை வளர்த்து விடுவதற்கு முக்கிய காரணம் அருண் சார் தான். அவர் தான் இதை எல்லாம் நடத்தி கொண்டு இருக்கிறார். கண்டிப்பாக அரசு நீதி கொடுக்க வேண்டும். அதனால் தான் பழைய மாணவனாக நான் இங்கு வந்து நிற்கிறேன்.

'நீ மாட்டுக்கறி தின்கிறவன் தானே.. எனக்கு முன்னாடி எப்படி உட்காரலாம்' என்று கேட்டுள்ளார். ஒரு ஆசிரியர் பேசுகிற பேச்சா இது. நான் மாட்டுக்கறி சாப்பிட்டால் என்ன? மனிதக்கறி சாப்பிட்டால் என்ன? எனக்கு உணவை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது.

நான் 'டிராப்அவுட்' மாணவன். அருண் சார் டார்ச்சர் தாங்க முடியாமல் நான் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன். நான் 2024-25 பேட்ச்சில் 11ம் வகுப்பு படித்தேன். 6 மாதம் தான் படித்தேன். அதன்பிறகு பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன். இதுக்கு மேல் எங்கேயும் படிக்க முடியாது. எனக்கான நீதி எனக்கு கிடைக்க வேண்டும். நான் புகார் அளிக்கவில்லை. புகார் அளிக்கும் சூழலில் நான் இல்லை. ஸ்டேஷன் பக்கம் போனால் டிசியை கிழித்து விடுவேன். படிப்பை, வாழ்க்கையை நாஸ்தியாகிவிடுவேன் என்று மிரட்டினார்.

இப்படி ஆண்டுதோறும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அகிலன் இதுபற்றி வெளியே சொல்ல முடியாமல் தான் தற்கொலை செய்துள்ளார். நான் இப்போது சொல்லிவிட்டேன். மொத்தம் எத்தனை மாணவர்கள் பாதிக்கப்பட்டனர் என்று தெரியவில்லை. ஆனால் ஆண்டுதோறும் 6 மாணவர்கள் வரை டிசியை வாங்கி கொண்டு சென்றுவிடுவார்கள்.

இன்னைக்கும் பள்ளியில் உள்ள 2 ஆசிரியர்கள் மாணவர்களை மூளைச்சலவை செய்து கொண்டு இருக்கிறார்கள்.பசங்க எல்லாம் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்யுங்கள். அப்போது தான் சாரை மீட்க முடியும் என்று மூளைச்சலவை செய்து வருகின்றனர். போலீஸ் இன்னும் 2 சாரையும் கைது செய்யாமல் இருப்பது சட்டத்துக்கு விரோதமானது. 2 பேரையும் போலீஸ் கைது செய்ய வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+