என்னை மன்னிச்சிடுங்க.. சீசரை நல்லா பார்த்துக்குங்க.. தூக்கில் தொங்கிய திவ்யா.. கோவை பரிதாபம்!
கோவை: "அம்மா, அப்பா, தம்பி.. என்னை மன்னிச்சிடுங்க.. என் சீசரை நல்லா பார்த்துக்குங்க" என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் கவிதா தூக்கில் தொங்கிவிட்டார்.
கோவை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையம் காமாட்சிபுரம் ராஜலட்சுமி கார்டனை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் கவிதா. 23 வயதாகிறது
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பத்திர எழுத்தர் ஆபீசில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு நாய்க்குட்டி என்றால் ரொம்ப பிரியம். அதனால் 2 வருஷமாக ஒரு நாயை வளர்த்து வந்தார்.

கவிதா
ஆனால் நாய் வளர்ப்பது கவிதாவின் அப்பாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மேலும் அந்த நாய் ராத்திரி நேரங்களில் குரைத்து கொண்டே இருப்பது, அக்கம் பக்கத்து வீட்டினருக்கு தொந்தரவாக இருந்தது. அதனால் அவரது அப்பா கடுப்பாகிவிட்டார்.

தரவே மாட்டேன்
அடுத்தவர்களுக்கு தொந்தரவாக இருப்பதால், நாயை வேறு யாரிடமாவது தந்துவிடலாமா என்று மகளிடம் கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ந்த கவிதா, நாயை தரவே மாட்டேன் என்கிட்டதான் இருக்கும் என்று உறுதியாக சொல்லி விட்டார். இருந்தாலும் அப்பா, நாயை தூக்கி கொண்டு போய் யாரிடமாவது தந்துவிடுவார் என்று பயந்து கொண்டே இருந்தார்.

தற்கொலை
ஒருகட்டத்தில் மனம் உடைந்த கவிதா, இரவு வீட்டில் எல்லோரும் தூங்கிய சமயம், ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் எழுந்ததும் மகளின் சடலத்தை க கண்டு பெற்றோர் கதறி துடித்தனர். இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசுக்கு தகவல் தரப்பட்டது. போலீசாரும் விரைந்து வந்து சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

சீசர்
அப்போது, கவிதா ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், "அம்மா, அப்பா, தம்பி.. என்னை மன்னிச்சிடுங்க.. என் செல்ல நாய் சீசரை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்.. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை" என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாயை தன்னிடமிருந்து அப்பா பிரிக்க நினைத்ததால், படித்த பட்டதாரி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை தந்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications