ஒரே ஆபாசம்.. வக்கிரம்.. "இரண்டாம் குத்து" பட போஸ்டரை டார் டாராக கிழித்த இளைஞர்.. கோவையில் பரபரப்பு!
இரண்டாம் குத்து போஸ்டரை கிழித்த நபரால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது
கோவை: "இரண்டாம் குத்து" என்ற படத்தின் போஸ்டர்களை இளைஞர் ஒருவர் ஆவேசமாக கிழித்தெறியும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Recommended Video
''இருட்டு அறையில் முரட்டு குத்து'' என்ற படத்தின் இரண்டாம் பாகம், இரண்டாம் குத்து என்ற பெயரில் வெளியாகிறது.. சந்தோஷ் ஜெயக்குமார் என்பவர் டைரக்ட் செய்து அவரே நடித்தும் இருக்கிறார்.. வெறும் கவர்ச்சியை மையமாக வைத்தும், இளைஞர்களை சுண்டி இழுக்கவும் இந்த படம் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதன் டீசரும் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.. டைரக்டர் பாரதிராஜா முதல் பலரும் இந்த ஆபாச படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், ஒரு சாராரின் ஆதரவு சந்தோஷ் ஜெயக்குமாருக்கு இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் போஸ்டரை தினேஷ் என்பவர் கிழித்தெறியும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. கோவை ராஜவீதி பகுதியை சேர்ந்தவர் இந்த தினேஷ்.. 35 வயதாகிறது.. தனியார் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இவர், வழக்கம்போல வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.. அப்போது, தேர்முட்டி பகுதியில் பெண்கள் மேல் நிலைப்பள்ளி பள்ளிக்கு எதிரே இரண்டாம் குத்து போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்து டென்ஷன் ஆகிவிட்டார்.. அதனால் ஆவேசம் அடைந்து சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை மொத்தமாக கிழித்தெறிந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தினேஷ் போஸ்டர்களை கிழிப்பதை அங்கிருந்தோர் வீடியோ எடுத்து, அதை இணையத்தில் போட்டுவிட, அந்த காட்சிகள்தான் வைரலாகிறது.
இதை பற்றி தினேஷ் சொல்லும்போது, "ரொம்ப ஆபாசமா இருக்கு.. இந்த போஸ்டர்களை ஸ்கூலுக்கு எதிரே கொண்டு வந்து ஒட்டி வெச்சிருக்காங்க.. ஸ்கூலுக்கு போகும் பெண் பிள்ளைகள் இந்த இடத்தை கடந்து செல்லும்போது, வருத்தத்திற்கு ஆளாகிறார்கள்.. அவர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு ஆபாசமாக இந்த போஸ்டர் இருக்கிறது.. அதனால்தான் கிழித்தேன்" என்றார்.












Click it and Unblock the Notifications