ஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை!
ஜெர்மனி இளைஞர் கோவையை சேர்ந்த இளம்பெண்ணை கரம்பிடித்தார்
Recommended Video
கோவை: ஜெர்மனி நாட்டு இளைஞரை காதலித்து தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார் கோவையை சேர்ந்த இளம்பெண் வித்ய பிரபா!
கோவை, துடியலூர் அருகிலுள்ள பன்னிமடையை சேர்ந்த சுப்பிரமணியம் - கலாவதி. இவர்களின் மகள் வித்யபிரபா. வயது 28 ஆகிறது.. கோவையில் கணிப்பொறியியல் படித்த வித்யபிரபாவுக்கு ஜெர்மனி நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

அங்கு வேலை பார்த்தபோது, ஜெர்மனி நாட்டை சேர்ந்த மைக்கேல் ஷீல்டஸ் என்பவரின் நட்பு கிடைத்தது. ஷீல்டஸ்-க்கு வயது 29 ஆகிறது. இவரும் அதே கம்பெனியில்தான் வேலை பார்த்து வந்தார். இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். திருமணம் செய்ய விரும்பினர். தங்கள் விருப்பத்தை வீட்டில் சொல்ல.. இரு தரப்புமே மகிழ்ச்சியுடன் சம்மதம் சொன்னார்கள்.
இதையடுத்து, மைக்கேல் ஷீல்டஸ் - வித்யபிரபாவுக்கு கோவை வெள்ளகிணர் பிரிவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் கலாச்சாரப்படி திருமணம் நடந்தது. ஆனால் கல்யாணத்துக்கு மைக்கேல் ஷீல்டஸ் குடும்பத்தினரால் வர முடியவில்லை. ஆனால், ஜெர்மனியில் இருந்து மைக்கேல் ஷீல்டஸ் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
அதனால், வித்யபிரபாவின் தாய் மாமா கனகராஜ் பார்வதி ஆகியோர்தான் மணமகனின் பெற்றோராக இருந்து சடங்குகளைச் செய்தனர். பாதபூஜை செய்தல், மலர் வாழ்த்துதல், மாலை மாத்துதல் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன. இதையெல்லாம் ஷீல்டஸ் ஆர்வமுடன் பார்த்து கொண்டே ரசித்தார்.
பட்டு வேட்டி சட்டை, தலைப்பாகை, குங்குமம் என மங்களகரமாக காணப்பட்டார் ஃபாரீன் மாப்பிள்ளை... இவர் மட்டுமில்லை.. கல்யாணத்தில் கலந்து கொண்ட மாப்பிள்ளையின் ஜெர்மனி உறவுகளும் தமிழ்க் கலாச்சார உடைதான் அணிந்திருந்தனர். அனைவரின் ஆசீர்வாதத்தோடும் இந்த திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது!
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications