கோவை பெண் யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ஊட்டியில் பதுங்கியிருந்த பிரபல யூடியூபர் மணிகண்டன் கைது!

Subscribe to Oneindia Tamil

கோவை: ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து விமர்சன வீடியோக்களை வெளியிட்டு வந்த யூடியூபர் மணிகண்டன் என்பவரை, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் ஊட்டியில் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (37). சமூக வலைதளங்களில் 'மணி ப்ரோ' என்று அறியப்படும் இவர், யூடியூப் சேனலையும், இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் நடத்தி வருகிறார். ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து கேள்வி எழுப்பி இவர் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

YouTuber Manikandan Arrested in Ooty Over Online Food Product Review Videos

கோவையைச் சேர்ந்த பெண் தொழில் முனைவோர் ஒருவரின் தயாரிப்புகள் குறித்து அவர் வெளியிட்ட வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. கோவை சிவானந்தா காலனி, டாடாபாத் சிக்ஸ் கார்னர் பகுதியில் 'நான் கற்றது Exclusive Store' என்ற பெயரில் கடை நடத்தி வருபவர் கே. விக்னேஷ்வரி. இவர் 'நான் கற்றது' என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். தான் தயாரிக்கும் பொருட்களின் செய்முறை, அவற்றின் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பான வீடியோக்களை அந்தச் சேனலில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வீடியோக்களை விமர்சித்து, யூடியூபர் மணிகண்டன் பேசி வந்துள்ளார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் தனது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மணிகண்டன் அனுமதியின்றி எடுத்து, அவரது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டு வந்ததாக விக்னேஷ்வரி புகார் தெரிவித்துள்ளார்.

தனது தயாரிப்புகள் குறித்தும் தொழில் குறித்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மணிகண்டன் பரப்பியதாகவும், தனிப்பட்ட முறையில் தன்னை இழிவுபடுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், மணிகண்டனின் சமூக வலைதளப் பதிவுகளால் தனது தொழிலுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நவம்பர் 13 ஆம் தேதி கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் விக்னேஷ்வரி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், மணிகண்டனின் சமூக வலைதளப் பதிவுகள் உள்ளிட்ட தகவல்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மணிகண்டன் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஊட்டிக்குச் சென்று, இன்று மணிகண்டனைக் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்துள்ளனர்.

காவல் ஆய்வாளர் கவிதா லட்சுமி தலைமையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணிகண்டன், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் மணிகண்டன் மீது ஏற்கெனவே 16 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+