இலங்கை ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை.. 15 பேர் பலி
கொழும்பு: இலங்கையில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டையில் மனிதவெடிகுண்டுகள் உள்பட 15 பேர் பலியாகிவிட்டனர்.

ரகசிய தகவல்
இந்த நிலையில் கல்முனை அருகே ஒரு வீட்டில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

மோதல்
அப்போது நேற்றிரவு அந்த வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டுகளை வீசினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சண்டை நடத்தினர். இரு தரப்பினரும் மாறி மாறி துப்பாக்கிளால் சுட்டனர்.

4 பேர் பயங்கரவாதிகள்
இதில் 15 பேர் பலியாகிவிட்டனர். 15 பேரில் 4 முதல் 6 பேர் வரை மனிதவெடிகுண்டுகளாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த இடத்தில் உள்ள சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அடுத்தடுத்த பதற்றம்
இலங்கையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இன்று காலையில் வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications