ரத்தம் படிந்த ஏசு சிலை.. ஈஸ்டர் குண்டு வெடிப்பு நினைவு இருக்கா? அநுரவை பார்த்து கண்ணீர் வடித்த மக்கள்
கொழும்பு: 253 உயிர்களைப் பலி கொண்ட நீர் கொழும்பு புனித செபஸ்தியான் தேவாலயத்திற்குச் சென்று குண்டுவெடிப்பின் போது நடந்தது என்ன? அந்த மக்கள் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டு நீதி கிடைக்காமல் தவித்து வருகின்றனர் என்பதை நேரில் சென்று இலங்கையின் புதிய அதிபர் அநுரகுமார திஸாநாயக்க பார்வையிட்டுள்ளார்.
இலங்கையின் புதிய அதிபராகப் பதவியேற்ற பிறகு அநுரகுமார திஸாநாயக்க நீர் கொழும்பில் உள்ள புனித செபஸ்தியான் தேவாலயத்திற்கு நேற்று சென்று திரும்பி இருக்கிறார். இந்தத் தேவாலயத்தை உலகிலுள்ள பலர் மறந்திருக்கவே முடியாது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஈஸ்டர் குண்டு வெடிப்புச் சம்பவம் இங்கேதான் நடைபெற்றது. இந்தக் குண்டுவெடிப்பு மொத்தம் 3 இடங்களில் நடைபெற்றது. அதில் காவல்துறையினர் உட்பட 253 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் துயரச் சம்பவத்தில் பலர் தங்களின் உறவினர்களைப் பறிகொடுத்தனர். இந்தத் தாக்குதல் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி நியூசிலாந்தில் உள்ள ஒரு மசூதியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ளது என்றும் இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அப்போதைய இலங்கை பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்திருந்தார். ஆண்டுகள் பல கடந்தும் இந்தக் குற்றச்சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் இன்னும் தண்டிக்கப்படவே இல்லை. அவர்களை அடையாளம் கண்டு, அதற்கான தண்டனையைப் பெற்று தரவேண்டும் என்ற கோரிக்கை பல காலமாக உரக்க ஒலித்துக் கொண்டுள்ளது.
இந்நிலையில்தான் நேற்று இந்தத் தேவாலயத்திற்கு அதிபர் அநுரகுமார திஸாநாயக்க சென்றுள்ளார். நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் தேவாலயம் வழக்கம் போல் கிறிஸ்துவ மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிபரிடம் அங்குள்ள சர்ச்சு ஃபாதர் தாக்குதல் போது நடந்த கொடூரமான காட்சிகளின் புகைப்படத் தொகுப்பைக் காட்டி விளக்கினார். ரத்தக் கறை படிந்த ஏசுவின் உருவச்சிலை ஒன்று கண்ணாடி கூண்டுக்குள் காட்சிக்கு உள்ளதையும் அவர் பார்வையிட்டார்.
அங்கே உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவு ஸ்தூபி ஒன்றில் அஞ்சலி செலுத்திய அதிபர் அங்கே திரண்டு நின்றிருந்த மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், "அண்மைக்காலத்தில் நடந்த மிக மோசமான அழிவு என்பது கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெற்றது. அந்த உண்மைகள் மண்ணுக்குள் புதைந்து போக நான் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். இந்த ஈஸ்டர் தாக்குதலுக்கான நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று நினைத்துத்தான் எனக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்றும் நம்புகிறேன்.
ஈஸ்டர் தாக்குதல் பற்றி நீதியும் நியமும் நிலைநாட்டப்படும் என்று உறுதியாக எதிர்பார்க்கின்றேன். அதற்கான முன்னெடுப்பு தொடங்கி இருக்கிறது. அடுத்தபடியாக 253 உயிர்களுக்கான நீதியைப் பெற்றுத் தருவது அவசியம்" என்று கூறியுள்ளார். இந்த ஈஸ்டர் தாக்குதலில் இலங்கை மக்களைத் தாண்டி 39 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மரணமடைந்தனர். 3 காவல்துறையினரின் உயிரும் பறிபோனது. அதற்கான சுவடுகள் இந்த சர்ச்சில் இப்போது பாதுகாப்பாக உள்ளன. அந்தத் தேவாலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுக் கட்டிமுடிக்கப்பட்டிருந்தாலும் உள்ளே இருக்கும் சுவரில் குண்டுகளால் துளைக்கப்பட்ட சுவரின் ஒரு பகுதியை அப்படியே காட்சிக்கு வைத்துள்ளனர்.
மேற்கொண்டு பல புகைப்படங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டும் உள்ளன. புதிய அதிபராக அநுரகுமார வந்தது முதல் இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர் எனப் பிரிவினைவாதம் குறைந்து வருகிறது. குறிப்பாகத் தமிழர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை தென்படுகின்றது. அநுர இலங்கையில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பார் என நம்புகின்றனர். தமிழர்கள் நிறைந்த பகுதியில் அநுரகுமாரவின் ஆதரவு குரலைக் கேட்க முடிகிறது.
அதன் தொடர்ச்சியாகத்தான் நீர்கொழும்பு பகுதியில் உள்ள தேவாலயத்திற்குச் சென்று அங்குள்ள மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளார் அதிபர். தேவாலயத்தில் திரண்டு நின்றிருந்த மக்கள் அநுரகுமார பேசும் போது கண்ணீர் மல்க அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். கண்டு வெடிப்பில் காயமடைந்த சிலர் அதற்கான அடையாளங்களை உடலில் சுமந்த படி அமர்ந்திருந்தனர். கால்களை இழந்த சிலர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி அந்தத் துயரச் சம்பவத்தை நினைத்து கண்ணீர் வடித்தபடி காட்சி அளித்தனர். இந்தத் தேவாலயத்தின் ஃபார்தர் அதிபருக்கு அதன் வலியையும் வேதனையையும் பழைய தடயங்களைக் காட்டி முடிந்தவரைப் புரிவைத்திருந்தார். அதைத் தனது சமூக வலைத்தள பதிவில் அநுர சுட்டிக்காட்டி உள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications