ஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்

Subscribe to Oneindia Tamil

கொழுப்பு: இலங்கை அமைச்சரும் மலையகத் தமிழர் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவுக்கு இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே இரங்கல் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான திருமாவளவன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் மூத்த அரசியல் தலைவர் மற்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இன்று காலமானார். இலங்கையை சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவர் ஆறுமுகன் தொண்டமான். சௌம்யமூர்த்தி ஆறுமுகன் ராமநாதன் தொண்டமான் என்ற இவர் அங்கு 30 வருடங்களாக அரசியலில் இருக்கிறார்.

Cant believe the death of Arumugam Thondaman condolences Indian Ambassador ro Srilanka

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இவர். அதேபோல் இவர் இலங்கையின் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக முன்னேற்ற அமைச்சர் ஆவார். இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதியான இவர் தமிழர்கள் இடையே அதிக பிரபலம் ஆனவர்.

இந்த நிலையில் இன்று ஆறுமுகன் தொண்டமான் மாரடைப்பு காரணமாக பலியானார். அவரின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரின் திடீர் மறைவுக்கு இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகன் தொண்டமானின் துன்பகரமான திடீர் மறைவினால் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன். ஆழ்ந்த அனுதாபங்கள். இன்று சந்தித்திருந்த நிலையில் ஆறுமுகன் தொண்டமான் மறைவு செய்தியினை நம்ப முடியவில்லை என்று இலங்கைக்கான இந்தியா தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல்:

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சீமான் இரங்கல் தெரிவித்துளார்.

திருமாவளவன் இரங்கல்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகத் தொண்டமான் திடீரென காலமானார் என்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்தும் வாடும் குடும்பத்தினருக்கும் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Cant believe the death of Arumugam Thondaman condolences Indian Ambassador ro Srilanka

ஆறுமுகன் தொண்டமான் உடலுக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அஞ்சலி செலுத்திஉள்ளார் . ஆறுமுகன் தொண்டமானின் மறைவு அரசுக்கும் மக்களுக்கும் மலையக மக்களுக்கும் பேரிழப்பு. அவரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+