இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் உடல் எரிப்பு... ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த இஸ்லாமியர் ஒருவரின் உடல் எரிக்கப்பட்டதற்கு முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவருமான ரவூஃப் ஹக்கீம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமய வரையறைகளுக்கு முரணாக இறந்தவரின் குடும்பத்தினர் உணர்வுகளுக்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை துரதரிஷ்டவசமானது என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக ரவூஃப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஜனாஸா

ஜனாஸா

நீர்கொழும்பு, கொச்சிக்கடை பலகத்துறை பிரதேசத்தில் வசித்து வந்த முஹம்மத் ஜமால் COVID-19 தொற்று காரணமாக உயிரிழந்த பின்னர், இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு அமைவாக அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட அனுமதிக்கப்படாமை துரதிர்ஷ்டவசமானதும் வருத்தத்தக்கதுமாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பலனளிக்கவில்லை

பலனளிக்கவில்லை

குறுகிய நேரத்துக்குள் அரசாங்க மற்றும் மருத்துவ துறையினருடன் தொடர்புகொண்டு ஜனாஸா எரியூட்டப்படுவதை தடுப்பதற்கு அவசரம் அவசரமாக மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. உலகளவில் வியாபித்து பரவிவரும் தொற்றுநோய் என்றாலும், சமய உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மேற்படி ஜனாஸா நல்லடக்கடம் செய்யப்பட வேண்டுமென போதனா வைத்தியசாலை மருத்துவர் சுஹைல் மற்றும் எமது கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா போன்றோர் நடுநிசிவரை முயற்சித்துள்ளனர்.

10 அடி ஆழம்

10 அடி ஆழம்

நல்லடக்கம் செய்வதுபற்றி எடுத்துக்கூறப்பட்ட போதிலும், நீர்கொழும்பு பிரதேசத்தில் பத்து அடி ஆழத்தில் குழி தோண்ட வேண்டியுள்ளதால் அங்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்வாக இருப்பதனால், தண்ணீர் கசிவு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து கொழும்பு, மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், மாவட்டத்துக்கு வெளியில் ஜனாஸாவை கொண்டு செல்வதற்கு சட்ட மருத்து அதிகாரியினால் அனுமதி வழங்கப்படவில்லை.

அசாதாரண சூழல்

அசாதாரண சூழல்


குடும்பத்தவர்களின் உணர்வுகளையும், வேண்டுகோளையும் கருத்திற்கொள்ளாது ஜனாஸாவை எரிப்பதில் அவசரம் காட்டப்பட்டுள்ளது.
எங்களது சமயரீதியான உரிமையை நாங்கள் வலியுறுத்தும் அதேவேளையில், தற்போதுள்ள அசாதாரண சுழ்நிலையில் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு நிலைமையை மேலும் சிக்கலாக்காமல், யதார்த்தபூர்வமான நடைமுறைச் சாத்தியமுள்ள தீர்க்கமான முடிவை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+