Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெருக்கடியில் இருந்து மீளுமா?.. ஐ.எம்.எப் அதிகாரிகள் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் இலங்கை!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில், அடுத்த வாரம் வரும் ஐ.எம்.எப் அதிகாரிகளின் வருகையினை எதிர்பார்த்து இலங்கை அரசு காத்திருக்கிறது.

Recommended Video

    Indian Ocean தான் குறி! China Spy Ship-க்கு முன்பாக Sri Lanka போன Indiaவின் Gift Dornier228

    இலங்கை வரலாறு காணாத கடனில் மூழ்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி இருப்பு குறைந்து இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது.

    இதனால், பெட்ரோல், டீசல் உள்பட அத்தியவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை தவித்தது.

     மக்கள் கொந்தளிப்பு

    மக்கள் கொந்தளிப்பு

    மருந்து பொருட்கள் கூட கிடைக்காமல் அல்லாடிய இலங்கை மக்கள், ஆட்சியில் இருந்த ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக வெகுண்டெழுந்தனர். இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்தது. முதலில் பிரதமர் பதவியில் இருந்து பதவி மகிந்த ராஜபக்சே பதவி விலகி ஓடினார். அடுத்த சில வாரங்களில் அதிபர் பதவியில் இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராகவும் மக்கள் பொங்கி எழுந்ததால், அவரும் மக்களுக்கு அஞ்சி ஓட்டம் பிடித்தார்.

     சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி

    சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி

    தற்போது தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் பதுங்கியிருக்கும் கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே நிதி நெருக்கடியை சமாளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக்கூறி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே வெளிநாட்டு கடன்களை அடைக்க முடியாது என திவால் நிலையை அறிவித்த இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரியது.

     அடுத்த வாரம் இலங்கைக்கு வருகிறார்கள்

    அடுத்த வாரம் இலங்கைக்கு வருகிறார்கள்

    முன்னதாக சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் பேச்சுவார்த்தை இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழலால் தடை பட்ட நிலையில் தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. இதற்காக சர்வதேச நாணய நிதி அமைப்பு (ஐ.எம்.எப்) அதிகாரிகள் அடுத்த வாரம் இலங்கைக்கு வர உள்ளனர். இலங்கையின் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ள சூழலில், வரும் 24-31 ஆம் தேதி வரை ஐ.எம்.எப் அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தருகின்றனர்.

     கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க

    கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க

    இந்த பயணத்தின் போது பொருளாதாரம் மற்றும் நிதி சீர்திருத்தங்கள் குறித்து இலங்கை அதிகரிகளுடன் ஐ.எம்.எப் அதிகாரிகள் பேச உள்ளனர். இலங்கையின் பொதுக் கடன்கள் அதிக அளவில் இருப்பதாக மதிப்பிட்ட ஐஎம்எப், கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க இலங்கையின் கடனாளிகளிடம் இருந்து போதுமான நிதி உத்தரவாதங்கள் தேவைப்படும் என தெரிகிறது. இலங்கைக்கு வழங்கப்படும் நிதி தொகுப்புகள் குறித்து விரைவில் ஒப்பந்தம் முன்னெடுக்கும் நோக்கத்தில் ஐ.எம்.எப் அதிகாரிகள் வருகை இருக்கும் என்று கூறப்படுகிறது. கடனில் மூழ்கி தவித்த இலங்கைக்கு புதிய நிதி தொகுப்புகள் வழங்குவது குறித்த பேச்சுவார்த்தை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. ஆனால், இலங்கையில் ஏற்பட்ட அசாதராண சூழல் இந்த பேச்சுவார்த்தை கைவிடப்பட்டது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+