இலங்கை தமிழர் பிரச்சனைக்கு 13-வது திருத்தம்- ரணிலிடம் வலியுறுத்திய மத்திய இணை அமைச்சர் முரளிதரன்
இலங்கை ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் மத்திய அமைச்சர் முரளிதரன்.
கொழும்பு: இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அந்நாட்டின் 13-வது அரசியல் திருத்தம் மூலம் தீர்வு காண வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவிடம் இந்திய இணை அமைச்சர் முரளிதரன் வலியுறுத்தினார்.
இலங்கையின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் பிப்ரவரி 4-ந் தேதி கொண்டாடப்பட்டன. இலங்கையின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்க அமைச்சர் முரளிதரன் இலங்கை வருகை தந்தார். இந்திய பிரதமர் மோடியும் இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். பிரதமர் மோடி தமது வாழ்த்து செய்தியில், இந்திய-இலங்கை இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவடையும் 2023ம் ஆண்டு குறிப்பதாக தெரிவித்த பிரதமர்,இருநாடுகளும் மிகவும் நெருக்கமான வரலாற்றுரீதியான உறவுகள்,புவியியல்ரீதியான நெருக்கம் மற்றும் கலாசாரங்களின் ஒத்திசைவு ஆகியவற்றைக்கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பொருளாதார மீட்சிக்காக இலங்கை மக்களுக்கு இந்தியா வழங்கும் உறுதியான ஆதரவினையும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சுதந்திர தினத்தை இலங்கை தமிழர்கள் கரிநாளாக கருதி எதிர்ப்பு தெரிவித்தனர். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இலங்கை சுதந்திர தின எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தபட்டன.

இலங்கை சுதந்திர தினம் தொடர்பாக வாழ்த்து தெரிவித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் நாம் அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகம். அவ்வாறு இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய பங்கை மீண்டும் பெறுவதற்கு தேவையான உத்திகளை வகுப்பதே இந்த ஆண்டு நமது முதன்மை நோக்கமாகும். அதற்கான புதிய பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்த திட்டத்தை நாட்டில் தற்போது முன்வைத்துள்ளோம். பெருமைமிகு தேசமாக இருந்த இலங்கையர்களின், கடந்த கால பலத்தை மீண்டும் மீட்டெடுத்து, நவீன தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைந்து, போட்டி நிறைந்த உலகப் பொருளாதாரத்தின் புதிய இலக்குகளை நோக்கி நாம் துரிதமாக நகர வேண்டும். 2023 இல் 75 ஆவது சுதந்திர தின விழாவுடன் ஆரம்பமாகும் இப்புதிய மறுசீரமைப்புப் பயணத்தை, 2048 ஆம் ஆண்டு 100ஆவது சுதந்திர தின விழா வரை, மாறாத அரச கொள்கையை நிலைநிறுத்துவதே எமது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். நூற்றாண்டு சுதந்திர தினத்தின்போது நாட்டு மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளும் பூர்த்திசெய்யப்பட்ட, உயர் பொருளாதார எழுச்சியைக் கொண்ட, உலகளாவிய மூலதனத்தின் மையமாக விளங்கும் புதிய இலங்கையை உருவாக்க முடியும் என்று நான் திடமாக நம்புகிறேன் என கூறியிருந்தார்.

இதனிடையே இலங்கை சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கொழும்புக்கு இந்திய இணை அமைச்சர் முரளிதரன் வருகை தந்திருந்தார். கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவையும் முரளிதரன் சந்தித்து பேசினார். அப்போது இலங்கை தமிழருக்கு அரசியல் சாசனத்தின் 13-வது திருத்தத்தின் கீழ் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என ரணிலிடம் அமைச்சர் முரளிதரன் வலியுறுத்தினார் என்கின்றன தகவல்கள்.
50 பேருந்துகள் வழங்கிய இந்தியா

இலங்கையின் 75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில் 50 பேருந்துகள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டன. இதற்கான ஆவணங்களை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பக்லே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவிடம் வழங்கினார்.

-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்












Click it and Unblock the Notifications