இலங்கை அருகே இந்தியா வந்த கச்சா எண்ணெய் கப்பலில் பயங்கர தீ- 19 பேர் மீட்பு
கொழும்பு: இந்தியா நோக்கி வந்த கச்சா எண்ணெய் கப்பலில் இலங்கை கடற்பரப்பில் ப்யங்கர தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் இருந்த 19 பேர் இந்திய கடற்படைகளின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
MT New Diamond என்ற கச்சா எண்ணெய் கப்பல், குவைத்தில் இருந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தது. இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் 37 நாட்டிகல் மைல் தொலைவில் வியாழக்கிழமை காலை திடீரென கப்பலில் தீ பிடித்தது.

இதனையடுத்து இலங்கை கடற்படை, விமானப் படை விமானங்கள் அப்பகுதிக்கு விரைந்தன. மேலும் இந்தியாவின் உதவியையும் இலங்கை கோரியது.
இந்தியாவின் கடற்படை கப்பல் அங்கு விரைந்து சென்று கப்பலில் தத்தளித்த 19 பேரை மீட்டனர். கப்பலில் இருந்த ஒருவரது நிலைமை என்ன என்பது தெரியவில்லை.

இந்த கப்பலில் 2,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இருந்தது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் மிகப் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இக்கப்பல் பனாமா நாட்டுக்கு சொந்தமானது எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications