இலங்கை குண்டு வெடிப்புகள் பின்னணியில் இருப்பது எந்த அமைப்பு? வெளியானது வீடியோ ஆதாரம்
Recommended Video
கொழும்பு: இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இருப்பதை உறுதி செய்யும், வகையிலான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இலங்கையில் தேவாலயங்கள் மற்றும், நட்சத்திர ஹோட்டல்களை குறி வைத்து கடந்த ஈஸ்டர் தினமான, ஞாயிற்றுக்கிழமை, அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 310 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட தற்கொலைப்படையினர் 7 பேரும், இலங்கையிலுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். இது சன்னி பிரிவை சேர்ந்த அமைப்பு, என்று, அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சமூக வலைத்தளம்
இந்த நிலையில், தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களால் நடத்தப்படும், அல் குர்பா மீடியா என்ற சமூக வலைத்தள பக்கத்தில், இதுதொடர்பாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு
இந்த வீடியோவில் இலங்கை தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புதான் காரணம் என்பதை போன்ற தகவல்கள் உள்ளன. தாக்குதலில் ஈடுபட்டோர் தொடர்பான படங்கள், அவர்கள் கைகளில் துப்பாக்கிகள் இருப்பதை போன்ற படங்கள் அதில் உள்ளன.

இந்திய உளவுத்துறை கண்டுபிடிப்பு
இதனிடையே, இலங்கை குண்டு வெடிப்பில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு தொடர்புள்ளதை முதலில் கண்டுபிடித்தது, இந்திய உளவுத்துறைதான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஹாங்காங்க்கை சேர்ந்த ஏசியா டைம்ஸ் என்ற பிரபல பத்திரிக்கையிடம் பேசிய, இந்திய உளவுத்துறை சீனியர் அதிகாரி ஒருவர், "தேசிய தவ்ஹித் ஜமாத் என்பது களத்தில் இறங்கி தாக்குதல் நடத்தியவர்கள் மட்டுமே. அவர்களை கட்டுப்படுத்தும் மையம் வேறு" என்று கூறியிருந்தார். தற்போது வெளியாகியுள்ள வீடியோ, இந்த கருத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

வெடிகுண்டுகள்
இதன் மூலம், இலங்கையில் முதல் முறையாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தனது தாக்குதலை அரங்கேற்றியுள்ளதாக தெரிகிறது. இவர்கள் எப்படி, மூளைச் சலவை செய்தார்கள், எப்படி இவ்வளவு வெடிகுண்டுகளை திரட்டினர் என்பது போன்ற விசாரணையில் தற்போது இலங்கை காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications