இலங்கை முழுவதும் திடீர் மின்வெட்டு.. குரங்கு தான் காரணமா? பொதுமக்கள் கடும் அவதி - பின்னணி
கொழும்பு: இலங்கையில் முழுவதும் இன்று திடீரென்று மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் இலங்கை அரசு பொதுமக்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று கெஞ்சி கேட்டுள்ளது. மேலும் இந்த திடீர் மின்தடையின் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் தேசிய மக்கள் சக்தி எனும் கட்சியை சேர்ந்த அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். அந்த நாட்டின் மின்சாரத்துறை அமைச்சராக இருப்பவர் ஜெயக்கோடி என்பவர் உள்ளார்.

இலங்கை முழுவதும் பொதுமக்களின் வீடு மற்றும் வணிக வளாகங்களுக்கு தேவையான மின்சாரத்தை சிலோன் மின்வாரியம் (CEB or Ceylon Electricity Board) வழங்கி வருகிறது. ஒவ்வொரு இடங்களிலும் பராமரிப்பு பணிக்காக அவ்வப்போது மின்சாரம் என்பது தடை செய்யப்படும்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமையான இன்று இலங்கை முழுவதும் ஒரே நேரத்தில் திடீரென்று மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள அனைத்து மின்வாரிய பிராந்தியங்களிலும் மின் வினியோகம் தடைப்பட்டுள்ளது. இது வழக்கமான மின்தடை தான் என்று பலரும் நினைத்தன். மேலும் சில நிமிடங்களில் வந்துவிடும் என்று மக்கள் எண்ணினர்.
ஆனால் அப்போது தான் அதிர்ச்சியான தகவல் வெளியானது. அதாவது அந்த திடீர் மின்தடை சில பகுதிகளில் மட்டும் ஏற்படவில்லை. கிட்டத்தட்ட நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதுபற்றி சிலோன் மின்வாரியம் சார்பில் ‛‛தேசிய மின்சாரம் வழங்கும் கிரிட்டில் திடீரென ஏற்பட்ட மின்சார ஏற்றத்தாழ்வு பிரச்சனையால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை சரிசெய்யும் பணி என்பது சிலோன் மின்வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி முடிவடைய சில மணிநேரங்கள் ஆகும்'' என்று கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி இலங்கையின் மின்சாரத்துறை அமைச்சர் ஜெயக்கோடி கூறுகையில், ‛‛பாணந்துறை மின்நிலையத்தில் குரங்கு நுழைந்து பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த குரங்கால் தான் நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. பாணந்துரை மின்நிலையத்தில் எமர்ஜென்சி பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
இதற்கிடையே திடீர் மின்தடையால் பொதுமக்கள் மின்சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். செல்போன் சார்ஜ் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் கொஞ்சம் அமைதி காக்க வேண்டும். மின்சாரத்தை மீண்டும் விநியோகம் செய்யும் பணி என்பது தீவிரமாக நடந்து வருகிறது என்று அரசு சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications