கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கை பிரதமரான ராஜபக்சேவின் முதல் அறிவிப்பே பரபரப்பு.. என்ன திட்டம் வைத்திருக்கிறார்?

இலங்கை பாராளுமன்றத்திற்கு உடனடியாக தேர்தலை கொண்டு வர வேண்டும் என்று அந்நாட்டின் புதிய பிரதமர் ராஜபக்சே அறிவித்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை பாராளுமன்றத்திற்கு உடனடியாக தேர்தலை கொண்டு வர வேண்டும் என்று அந்நாட்டின் புதிய பிரதமர் ராஜபக்சே அறிவித்து இருக்கிறார்.

இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்று இருக்கிறார். பல எதிர்ப்புகளை மீறி அவர் பிரதமராக பதவி ஏற்று இருக்கிறார்.

ராஜபக்சே பிரதமராகி இருப்பது இலங்கை தமிழர்களை அழிக்கத்தான்.. மு.தம்பிதுரை தாக்கு ராஜபக்சே பிரதமராகி இருப்பது இலங்கை தமிழர்களை அழிக்கத்தான்.. மு.தம்பிதுரை தாக்கு

தேர்தல்

தேர்தல்

ராஜபக்சே பிரதமராக தேர்வு செய்யப்பட்டபின் வெளியிட்ட முதல் அறிக்கையே மிகவும் பரபரப்பான அறிக்கையாக உள்ளது. அதன்படி இலங்கை பாராளுமன்றத்திற்கு உடனடியாக தேர்தலை கொண்டு வர வேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏமாற்றி வருகிறார்கள்

ஏமாற்றி வருகிறார்கள்

இதற்கு முன் இருந்த பிரதமரும் அவரது அமைச்சர்களும் தேர்தலை நடத்தாமல் தள்ளிபோட்டுக் கொண்டே சென்றனர். தொடர்ந்து ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு வந்தனர். அவர்கள் நடத்தாமல் இருந்த தேர்தலை நடத்துவதே எங்கள் நோக்கம். தேர்தலை விரைவில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றுள்ளார்.

இரண்டு தேர்தல்

இரண்டு தேர்தல்

அதன்படி இலங்கை பாராளுமன்றத்திற்கு உடனடியாக தேர்தலை கொண்டு வர வேண்டும். மேலும் இலங்கை மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். இந்த இரண்டு தேர்தல்களும் தனக்கு சாதகமான முடிவுகளை வழங்கும் என்று ராஜபக்சே நினைப்பதாக கூறப்படுகிறது. அதனால்தான் அவர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

என்ன காரணம்

என்ன காரணம்

சில மாதங்களுக்கு முன் அங்கு நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் ராஜபக்சே அமோக வெற்றி பெற்றார். இதனால் தேர்தலை உடனே நடத்துவது அவருக்கு சாதகமாக இருக்கும். மேலும் தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையும் கூட தேர்தல் நடத்தி மெஜாரிட்டி ஆட்சி அமைந்தால்தான் சரியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Mahinda Rajapaksa calls for snap parliamentary polls in his inaugural statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X