இலங்கை குண்டுவெடிப்பு.. ராமநாதபுரம் முதல் சென்னை வரை பரபரக்கும் விசாரணை.. என்ஐஏ ஆபரேஷன்!
இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, கோவை உட்பட தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு காரணமான எல்லோரையும் அந்நாட்டு ராணுவம் தீவிரமாக தேடி வருகிறது. இலங்கை மட்டுமில்லாமல் இந்தியாவிலும் இதற்கான சோதனை நடந்து வருகிறது.
கடந்த 21ம் தேதி ஞாயிறு அன்று இலங்கையில் வரிசையாக குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள். 450க்கும் அதிகமானோர் இதில் காயம் அடைந்தனர். இதில் இன்னும் பலர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

என்ன சோதனை
இந்த நிலையில் இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் சென்னை, கோவை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி வருகிறது. அதேபோல் சென்னையில் தனியாக சிறப்பு புலனாய்வு அமைப்பும் கடுமையான சோதனையில் ஈடுப்பட்டு வருகிறது.

ஏன் இப்படி
இலங்கையில் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்தான் சரான் ஹாசிம். இவர் ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர். இவருக்கு நெருக்கமான நபர்கள் சென்னையில் வசித்து வருவதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்துதான் தற்போது தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகிறது. தீவிரவாதி சரான் இலங்கை தாக்குதலுக்கு முன் சென்னை வந்து சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மிக மோசம்
இந்த விசாரணையில் இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் ஹசன் என்ற இளைஞரை விசாரணை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகிறார்கள். இலங்கை குண்டுவெடிப்பிற்கு முன் இவர் சரானிடம் பேசி இருக்கிறார். அதன்பின் இலங்கையில் குண்டு வெடிப்பு நடந்த போது ஹசன் ராமநாதபுரம் சென்றுள்ளார். இவருக்கும் குண்டுவெடிப்பிற்கும் முக்கிய தொடர்பு இருப்பதாக தெரிகிறது.

எங்கே இருக்கிறார்
விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி இவர் தற்போது கேரளாவில் இருப்பதாக கூறப்படுகிறது. கேரளாவில் ஏற்கனவே என்ஐஏ அதிகாரிகள் ஐஎஸ் தீவிரவாதி ஒருவரை கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது ஹசனை பிடிக்க கேரளாவிற்கு தனிப்படை விரைந்து சென்றுள்ளது.












Click it and Unblock the Notifications