ஒருபுறம் சீன கப்பல்! மறுபுறம் பாக். ராணுவ கப்பல்! என்ன நடக்கிறது இலங்கையில்! உற்று நோக்கும் இந்தியா
கொழும்பு: சீன உளவு கப்பல் வருகைக்கு இடையே இப்போது பாகிஸ்தான் ராணுவ கப்பலும் இலங்கைக்குச் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை இப்போது மிக மோசமான இக்கட்டான சூழலில் தவித்து வருகிறது. உள்நாட்டுப் போர் தொடங்கி பல்வேறு விவகாரங்கள் காரணமாக இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
இந்த பொருளாதார நெருக்கடி அங்கு அரசியல் குழப்பத்திற்கும் வழி வகுத்துள்ளது. இந்தச் சூழலில் இருந்து மீள உலக நாடுகளின் உதவியையே இலங்கை நம்பி உள்ளது.

சீனா
ஒரு புறம் சீனாவின் நடவடிக்கைகள் தெற்கு ஆசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. முதலில் தைவான் விவகாரத்தில் அமெரிக்க சாபாநயகர் நான்சி பெலோசி அங்கே இருக்கும் போதே போர்ப் பயிற்சியை மேற்கொண்டது. அடுத்து தனது போர்க் கப்பலை இலங்கைக்கு அனுப்பியது சீனா! இந்தப் போர்க் கப்பலால் இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஏவுகணைகள் குறித்த தகவல்களைக் கண்காணிக்க முடியும் என்பதால் இந்தியா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

பாகிஸ்தான்
இதனால் சீன கப்பலின் வருகையைக் காலவரையற்று தாமதப்படுத்துமாறு இலங்கை கேட்டுக் கொண்டது. இருப்பினும், இடையில் என்ன நடந்ததோ எனத் தெரியவில்லை திடீரென சீன உளவு கப்பல் வருகைக்கு இலங்கை நேற்று அனுமதி அளித்திருந்தது. சில நாட்களில் அந்தக் கப்பல் இலங்கை செல்ல உள்ளது. இந்தச் சூழலில் மறுபுறம் பாகிஸ்தானுக்குச் சொந்தமான போர்க்கப்பலும் இப்போது இலங்கைக்குச் சென்றுள்ளது.

போர்க் கப்பல்
இந்த தைமூர் போர்க்கப்பல் இப்போது இலங்கை கொழும்பு துறைமுகத்தில் உள்ளது. 134 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் பாகிஸ்தான் கடற்படை கேப்டன் எம் யாசிர் தாஹிர் தலைமையில் இயங்குகிறது. இந்தக் கப்பலில் மொத்தம் 169 பேர் உள்ளனர். இந்தக் கப்பல் முதலில் வங்கதேசத்திற்குத் தான் செல்லவிருந்தது. இருப்பினும், வங்கதேசம் அனுமதி தராததால், இந்தக் கப்பல் இப்போது இலங்கைக்குச் சென்று உள்ளது.

போர் பயிற்சி
இதனிடையே தற்போது கொழும்பில் உள்ள பாகிஸ்தான் கடற்படை கப்பல் தைமூர் உடன் இணைந்து இலங்கை கடற்படை மேற்கு கடற்பகுதியில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, சீன உளவு கப்பல் வருகையால் அங்குப் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தக் கூட்டுப்பயிற்சியை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. நாளைய தினம் பாகிஸ்தான் கப்பல் இலங்கையில் இருந்து கிளம்ப உள்ளது.
Recommended Video

பாக். கப்பல்
இந்த ராணுவ கப்பல் சீனாவின் ஷாங்காயில் உள்ள டோங் துறைமுகத்தில் கட்டப்பட்டதாகும். சீனாவிடம் இருந்து சில நவீன போர்க்கப்பல்களைப் பெறப் பாகிஸ்தான் ஒப்பந்தம் போட்டு இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் தனது முதல் கப்பலைப் பெற்ற நிலையில், இப்போது இரண்டாம் கப்பலை பெற்றுள்ளது. சீனாவில் இருந்தே இந்தக் கப்பல் ஒட்டுமொத்தமாகப் பாகிஸ்தான் கடற்படையின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications