கொழும்பிற்குள் புகுந்த மர்ம லாரி.. முழுக்க முழுக்க வெடிகுண்டு? உளவுத்துறை தகவலால் தேடுதல் வேட்டை!
கொழும்பிற்குள் வெடிகுண்டு நிரப்பப்பட்ட லாரி புகுந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு: கொழும்பிற்குள் வெடிகுண்டு நிரப்பப்பட்ட லாரி புகுந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
ஈஸ்டர் திருநாளான நேற்று முதல்நாள் இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 300க்கும் அதிகமானோர் பலியானார்கள்.
இதில் 450 பேர் காயம் அடைந்தனர். இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த நிலையில் இலங்கையில் தற்போது அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

என்ன பிரச்சனை
கொழும்பிற்குள் வெடிகுண்டு நிரப்பப்பட்ட லாரி புகுந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது மற்ற புரளிகள் போல இல்லாமல் உளவுத்துறைக்கு வந்த தகவல் என்று கூறப்படுகிறது. உளவுத்துறைக்கு வந்த நம்பகமான தகவல் இது என்று கூறுகிறார்கள்.

இரண்டு லாரி
இரண்டு லாரிகள் மற்றும் வேன்களில் நிறைய குண்டுகளை வைத்து மறைத்து கொழும்பு நகருக்குள் கொண்டு வந்து இருக்கிறார்கள். ஆனால் இந்த வாகனங்கள் எங்கே சென்றது என்று தெரியவில்லை. இதில் மிகவும் அபாயகரமான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று தகவல் சென்றுள்ளது.

உளவுத்துறை எப்படி
இந்த தகவலை அடுத்து உளவுத்துறை தற்போது உஷாராகி உள்ளது. வதந்தி தகவல்களை போல இதை புறந்தள்ள வேண்டாம். தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்குங்கள் என்று போலீசுக்கு இதனால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தற்போது இலங்கை முழுக்க பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் ராணுவம்
கொழும்பில் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் அங்கு தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. முக்கியமாக வேன் லாரிகளில் தீவிர சோதனைகள் நடந்து வருகிறது. இந்த செய்தி அங்கு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications