இலங்கை அதிபர் மாளிகையில் பாதாள ரகசிய வீடு.. கோத்தபயவை தேடிய போராட்டக்காரர்கள்
கொழும்பு: இலங்கையில் அதிபர் மாளிகையில் இருக்கும் ஒரு ரகசிய வீட்டை போராட்டக்காரர்கள் கண்டுபிடித்து அதை சுற்றி பார்க்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கையில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் சுற்றுலாத்துறையும் தேயிலை ஏற்றுமதி தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பொருளாதார நெருக்கடி தொடங்கியது.
இதனால் பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி முதல் இலங்கையில் மக்கள் இணைந்து போராட்டம் நடத்த தொடங்கினர்.

பிரதமர்
இதையடுத்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவின் அலரிமாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதனால் உயிருக்கு பயந்து பிரதமர் மகிந்த ராஜபக்ச அஞ்சி ஓடினார். பின்னர் தனது பதவியிலிருந்து விலகவே மாட்டேன் என அடம்பிடித்த ராஜபக்ச வேறு வழியின்றி பதவியை ராஜினாமா செய்தார். சரியாக சொல்ல போனால் மக்கள் அவரை பதவியை ராஜினாமா செய்ய வைத்தனர்.

இலங்கையில்
இந்த நிலையில் இலங்கையில் அனைத்து கட்சிகளும் இணைந்து நடத்தும் ஒரு ஆட்சி அமைந்தது. பிரதமராக ரணில் விக்கிரமதுங்கவும் ஏற்கெனவே கோத்தபய அரசில் பதவி விலகிய அமைச்சர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்களும் தேர்வு செய்யப்பட்டனர். புதிய பிரதமர் ரணில் இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிமித்த எதை எதையோ செய்து பார்த்தார்.

முற்றுகை
ஆனால் எதுவும் கைக் கொடுக்கவில்லை. இதனால் பொங்கி எழுந்த மக்கள் நேற்றைய தினம் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். அவர்களை ராணுவத்தினர் தடுத்து நிறுத்த பல்வேறு முயற்சிகளை செய்தும் பலனளிக்கவில்லை. இதையடுத்து அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் தங்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நீச்சல் குளம்
அதிபர் மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் குளிப்பது, சமையல் அறையில் உணவு சமைத்து சாப்பிடுவது, அங்குள்ள அறையை சுற்றி பார்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனர். மேலும் அதிபர் மாளிகையில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தையும் விட்டு வைக்கவில்லை.

வைரல் வீடியோ
இந்த நிலையில் அதிபர் மாளிகையில் உள்ள ஒரு ரகசிய வீட்டையும் போராட்டக்காரர்கள் சுற்றி பார்த்தனர். இந்த பாதாள ரகசிய வீடு என்பது போர் சமயத்தில் அவசரத்திற்காக பயன்படுத்துவது. இந்த ரகசிய வீடு மிகவும் பெரியதாகவே இருக்கிறது. இதன் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு வேளை கோத்தபய இங்கிருப்பார் என நினைத்து தேடினார்களா என தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications