ரஜினி எங்களிடம் விசா கேட்டு விண்ணப்பிக்கவில்லை.. அது வதந்தி.. இலங்கை அரசு விளக்கம்!
நடிகர் ரஜினிகாந்த் விசா கேட்டு விண்ணப்பிக்கவில்லை, அதை நாங்கள் மறுக்கவும் இல்லை என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு: நடிகர் ரஜினிகாந்த் விசா கேட்டு விண்ணப்பிக்கவில்லை, அதை நாங்கள் மறுக்கவும் இல்லை என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் இலங்கை விசா தொடர்பான சர்ச்சை பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் சந்திப்பு நடத்தினார்.
இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள், அமைச்சர்கள் உடன் இருந்தனர். இவர்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள்.

அரசியல் திட்டம்
இந்த சந்திப்பில் ரஜினியின் அரசியல் திட்டங்கள் குறித்து விக்னேஷ்வரன் கேட்டறிந்தார். அதேபோல் இலங்கை வருமாறும், அங்கிருக்கும் தமிழ் மக்களை சந்திக்குமாறும். அரசியல் ரீதியான கூட்டங்களில் அங்கு கலந்து கொள்ள வேண்டும் என்றும் ரஜினிக்கு விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்தார்.

விசா எப்படி
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. இலங்கை ஊடகங்கள் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. இது தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

காரணம்
அதன்படி யாழ்ப்பாணத்திற்கு வருகை தர உள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இயலாது. அவர் அரசியல் நடவடிக்கைகாக இலங்கை வருகிறார். அவர் மக்களை சந்திக்க வாய்ப்புள்ளது, அதனால் தர முடியாது என்று இலங்கை அரசு கூறியதாக இலங்கை ஊடகங்களில் செய்தி வெளியானது.

என்ன விளக்கம்
இந்த நிலையில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஊடக தொடர்பாளர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதில், ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக பரவும் செய்திகள் எல்லாம் பொய். எதுவும் உண்மையில்லை. விசா வேண்டி ரஜினியிடமிருந்து எந்த கோரிக்கையும் எங்களுக்கு இதுவரை வரவில்லை. வந்தால் அதை பரிசீலிப்போம் என்று தெரிவித்தார்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications