தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் அதிரடி அறிவிப்புகள்! "அதிமேதகு", தனி தேசிய கொடி ரத்து!!
கொழும்பு: இலங்கையின் தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கே இன்று அதிரடியாக 2 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியை அதிமேதகு என அழைக்கக் கூடாது; ஜனாதிபதிக்கு தனி கொடி என இருக்கக் கூடாது என அறிவித்துள்ளார் ரணில் விக்கிரமசிங்கே.
Recommended Video
தற்காலிக ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில் இலங்கை மக்களுக்கு ஆற்றிய உரை: தற்காலிக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள நிலையில் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன். அரசியல் சாசனத்தின் 19-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த உகந்த சூழ்நிலைகள் உருவாக்கப்படும். நாட்டில் ஜனாதிபதியை அதிமேதகு என அழைப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.

அதேபோல் நாட்டுக்கு தேசியக்கொடி மட்டும் போதுமானது. ஜனாதிபதிக்கு என தனியாக ஒரு கொடியை நடைமுறைப்படுத்த வேண்டியதும் இல்லை. ஜனாதிபதிக்கான தனி கொடி ரத்து செய்யப்படுகின்றது.
நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரான எந்த குழுவுக்கும் அனுமதி கிடையாது. நாட்டு மக்களுக்கு போராடும் உரிமை இருக்கிறது. அதற்காக வன்முறையை அனுமதிக்க முடியாது. போராட்டக்காரர்கள், கிளர்ச்சிக்காரர்கள் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. போராட்டம் என்பது சட்டப்பூர்வமாக நடைபெறக் கூடியது. கிளர்ச்சி என்பது சட்டவிரோதமானது.
அனைத்து அரசியல் கட்சிகளும் நாடு, நாட்டு மக்கள் பற்றி சிந்தித்து செயல்பட வேண்டியது இப்போதைய தேவை. நமக்கு இதுதான் முதன்மையானது. அதன்பின்னரே அரசியல் பணிகளை செய்வது. நாடாளுமன்றத்தில் வரும் 20-ந் தேதி புதிய ஜனாதிபதி தேர்வு நடைபெற உள்ளது. நாடாளுமன்ற எம்.பி.க்கள், நாடாளுமன்றம் ஆகியவற்றின் பாதுகாப்பை தற்காலிக ஜனாதிபதி என்ற அடிப்படையில் பாதுகாக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

பாசிசவாத முறையில் சிலர் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிகளும் குண்டுகளும் ஏற்கனவே காணாமல் போயுள்ளது. போராட்டங்களால் பாதுகாப்பு படையினர் 24 பேர் ஏற்கனவே படுகாயமடைந்துள்ளனர். சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும்.
எனக்கு ஜனநாயக அமைப்புகளில் நம்பிக்கை உண்டு. ஜனநாயகத்தின் அடிப்படையில்தான் செயல்படுவேன். நாட்டின் அரசியல்சாசனத்துக்கு விரோதமாக ஒருபோதும் நான் செயல்பட மாட்டேன். நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடக் கூடாது. அது மக்களை வெகுவாகப் பாதிக்கும். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். ஒட்டுமொத்த நாடும் புதிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்கான அடிப்படை சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். ஊழலற்ற அமைதியான, வளமான சமூகம் ஒன்றை உருவாக்குவோம். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications