அவர்களை விட கூடாது.. உடனே தண்டியுங்கள்.. குண்டுவெடிப்பிற்கு மகிந்த ராஜபக்சே கண்டனம்!
இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் இன்று மிக மோசமான நாள். 10 வருடங்களுக்கு பின் அங்கு மிக மோசமான தாக்குதல் நடைபெற்று வருகிறது. இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது.

இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 5 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 170க்கும் அதிகமானோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வருகிறது.
மொத்தம் ஆறு இடங்களில் இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அதன்பின் இரண்டு இடங்களில் குண்டு வெடித்தது. அதன்படி மொத்தம் 8 இடங்களில் குண்டு வெடித்துள்ளது.
கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச் ஆகிய இடங்களில் குண்டுவெடித்துள்ளது மேலும் சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது. அதன்பின் 6 அணி நேரம் கழித்து இன்னும் 2 இடங்களில் குண்டு வெடித்தது.
இதில் 280க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். தற்போது இதுகுறித்து இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதலை அனுமதிக்க முடியாது.
இந்த தாக்குதலுக்கு காரணமான கொடூரமானவர்களை தண்டிக்க வேண்டும். இந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications