பரபர இலங்கை- இங்கிட்டு பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்..அங்கிட்டு கோத்தபாய ராஜபக்சே தப்பி ஓட்டமா?
இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே அந்நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் என்கின்றன இலங்கை ஊடகங்கள்.
கொழும்பு: இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே திடீரென அந்நாட்டில் இருந்து வெளியேறி வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளார். கோத்தபாய ராஜபக்சே, மியான்மருக்கு சென்றுள்ளதாகவும் சீனாவுக்கு சென்றிருப்பதாகவும் முரண்பட்ட தகவல்களை இலங்கை ஊடகங்கள் வெளியிட்டதால் குழப்பம் நிலவுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் கொல்லப்படவில்லை; இப்போதும் உயிருடன் இருக்கிறார்; இந்த தகவலை பிரபாகரன் குடும்பத்தின் அனுமதியுடன் அறிவிக்கிறேன் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் திடீரென தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் இருந்து அறிவிப்பு வெளியிட்டார்.

பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பு தொடர்பாக மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்தனர். இலங்கை ராணுவமும் அரசியல் தலைவர்களும் வழக்கம் போல பிரபாகரன் உயிருடனேயே இல்லை; பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார்; பிரபாகரன் உடல் 2009-ம் ஆண்டே எரிக்கப்பட்டுவிட்டது; மரபணு பரிசோதனை சான்றிதழ்கள் கூட இருக்கின்றன என கூறி வந்தனர்.
பிரபாகரனின் பாதுகாவலர்களாக இருந்த போராளிகளோ, 2009-ம் ஆண்டு மே 15-ந் தேதி வரை பிரபாகரன் களத்தில் தனித்தே இருந்தார்; பிரபாகரன் உயிருடன் இல்லை என்பது உறுதி; ஆனால் இலங்கை ராணுவம் காட்டியது பிரபாகரனின் உடலே அல்ல என இன்னொரு பக்கம் குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் தந்தை பெரியார் திக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், பிரபாகரன் மகள் துவாரகாவை முன்வைத்து அரசியல் இயக்கம் ஒன்றை தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என கூறியிருந்தார். இதன் மூலம் பிரபாகரன் மனைவி மதிவதினி, மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதும் உறுதியானது.
இந்த பின்னணியில் இலங்கையில் இரு முக்கிய அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ஒன்று, ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கு வராமல் இருந்த ரணில் விக்கிரமசிங்கே விரைவில் டெல்லி வருகை தர உள்ளார். டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகொட, மத்திய அரசு மூத்த செயலாளர்களை முதலில் சந்தித்தார். பின்னர் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார்.

மற்றொன்று, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, திடீரென இலங்கையில் இருந்து வெளியேறி உள்ளார். இது தொடர்பாக செய்திகளை வெளியிட்டுள்ள இலங்கை ஊடகங்கள் கோத்தபாய ராஜபக்சே சீனாவுக்கு சென்றிருக்கிறார் என்கின்றன. மேலும் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீனா செல்வதற்காக மலேசியாவின் கோலாலம்பூர் நோக்கி கோத்தபாய ராஜபக்சே செல்கிறார்; இன்று அதிகாலை 12.25 மணிக்கு மலேசியன் ஏர்லைன்ஸின் MH-178 விமானத்தில் கோலாலம்பூர் புறப்பட்டார் கோத்தபாய என்கின்றன ஒருதரப்பு செய்தி. மேலும் கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேற, விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தை கோத்தபாய தரப்பு பயன்படுத்தியதாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது. மற்றொரு தரப்போ, கோத்தபாய ராஜபக்சே, மியானமருக்கு சென்றதாக சொல்கிறது. மியான்மர் அமைப்புகளின் அழைப்பின் பேரில் கோத்தபாய சென்றதாகவும் கூறப்படுகிறது.
இலங்கையில் தமிழீழ தனிநாடு தொடர்பான நடவடிக்கைகளுக்கு அல்லது தமிழர் அரசியல் விடுதலைக்கான நடவடிக்கைகளை பிரபாகரன் வெளியே வந்து அறிவிப்பார் என கூறப்படுகிறது. இதன் உண்மைத்தன்மை ஒருபக்கம் இருக்க, இலங்கையில் இருந்து கோத்தபாய ராஜபக்சே திடீரென வெளியேறி எந்த நாட்டுக்கு சென்றார் என்பதில் குழப்பம் இருக்கிறது என்பது உள்ளிட்ட செய்திகளால் தலைநகர் கொழும்பு வட்டாரங்கள் பரபரக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications