இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: 141 இடங்களைக் கைப்பற்றி ஜனாதிபதி அனுரவின் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் முடிவு அறிவிக்கப்பட்ட 196 இடங்களில் சிங்கள பேரினவாத கட்சியான ஜேவிபி தலைமையிலான ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 141 இடங்களைப் பெற்றுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு தேவை 113 இடங்கள். சஜித் பிரேமதாசவின் ஐக்கிய தேசியக் கட்சி 35 இடங்களுடன் 2-வது இடத்தில் இருந்து வருகிறது.
இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதன் பின்னர் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. இதனையடுத்து மாவட்டங்களின் தேர்தல் தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டு தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் 196 இடங்களுக்கு மக்களால் எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்; எஞ்சிய 29 இடங்களுக்கு எம்பிக்கள் நியமிக்கப்படுவர்.
தற்போது 196 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 141 இடங்களைப் பெற்றுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு தேவை 113 இடங்கள். இந்த பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை தேசிய மக்கள் சக்தி அணி பெற்றிருக்கிறது.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்:
மொத்தம் - 225 எம்பிக்கள்
மக்களால் தேர்வு செய்யப்படும் எம்பிக்கள் 196
வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் நியமன எம்பிக்கள் 29
முடிவுகள் அறிவிக்கப்பட்டவை 196
பெரும்பான்மைக்கு தேவை 113
தேசிய மக்கள் சக்தி 141 (6,863,186 வாக்குகள்)
ஐக்கிய மக்கள் சக்தி 35 (1,968,716 வாக்குகள்)
இலங்கை தமிழரசு கட்சி 7 (257,813 வாக்குகள்)
புதிய ஜனநாயக முன்னணி 3 (500,835 வாக்குகள்)
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2 (350,429 வாக்குகள்)
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 (87,038 வாக்குகள்)
ஐக்கிய தேசியக் கட்சி 1 (66,234 வாக்குகள்)
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 1 (65,382 வாக்குகள்)
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 (39,894வாக்குகள்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1 (33,911வாக்குகள்)
சுயேட்சை குழு (17) 1 (27,855வாக்குகள்)
இலங்கை தொழிலாளர் கட்சி 1 (17,710வாக்குகள்)
ஈழத் தமிழர் தாயக நிலப்பரப்பான வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் தேசிய மக்கள் சக்தி அதிக இடங்களைப் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மொத்தம் 6 இடங்களில் தேசிய மக்கள் சக்தி 3 இடங்களில் வென்றது; இலங்கை தமிழரசு கட்சி- 1; அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்-1;சுயேட்சை குழு (17)- 1
வன்னி மாவட்டத்தில் மொத்தம் 6 இடங்களில் 2-ல் தேசிய மக்கள் சக்தி வென்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 1; இலங்கை தமிழரசுக் கட்சி 1; ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 1, இலங்கை தொழிலாளர் கட்சி 1-ல் வென்றுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 3; தேசிய மக்கள் சக்தி 1; இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 1 இடத்தில் வென்றுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 2; ஐக்கிய மக்கள் சக்தி 1; இலங்கை தமிழரசுக் கட்சி 1 இடத்தில் வென்றுள்ளன.
மன்னார், வவுனியாவை உள்ளடக்கிய வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 2; ஐக்கிய மக்கள் சக்தி 1; இலங்கை தமிழரசுக் கட்சி 1, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 1; இலங்கை தொழிலாளர் கட்சி 1 இடத்தில் வென்றுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தியின் அனுரா குமார திசநாயக்க வென்றார். ஆனால் தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றத்தில் 3 எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற வேண்டிய நெருக்கடி அனுராவுக்கு ஏற்பட்டது. இதனையடுத்தே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications