இலங்கை:பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே நாளை ராஜினாமா? இடைக்கால அரசாங்கம் அமைவதில் குழப்பம்
கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் வேறுவழியே இல்லாமல் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும் அவரது அமைச்சர்களும் நாளை ராஜினாமா செய்ய உள்ளனர். மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்யும் நிலையில் புதிய இடைக்கால அரசாங்கம் யார் தலைமையில் அமையும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

இலங்கை கிளர்ச்சி
இலங்கையில் பொருளாதாரம் படு மோசமான வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டுள்ளனர். இதனையடுத்து பொருளாதார நெருக்கடிகளுக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த் 2 மாதங்களாக பொதுமக்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மகிந்தவுக்கு நெருக்கடி
இலங்கை தலைநகர் கொழும்பில் காலிமுகத்திடலில் முகாமிட்டு இரவும் பகலுமாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவை அகற்றும் நடவடிக்கைகளை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே மேற்கொண்டு வருகிறார். முதலில் தாம் பதவி விலக முடியாது என மறுத்து வந்தார் மகிந்த ராஜபக்சே. ஆனால் மகிந்தவை வீட்டுக்கு அனுப்புவதில் கோத்தபாய உறுதியாக இருக்கிறார்.

அவசர நிலை அமல்
அத்துடன் திடீரென இலங்கையில் கோத்தபாய ராஜபக்சே அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தினார். இதனால் இலங்கை அரசியலில் அதி உச்ச குழப்ப நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் வேறுவழியே இல்லாமல் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும் அவரது அமைச்சர்களும் நாளை அல்லது நாளை மறுநாள் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

புதிய இடைக்கால அரசு?
மகிந்த அண்ட் கோவின் ராஜினாமாவைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அரசு அமைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அழைக்க உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கொழும்பு பத்திரிகையாளர்கள் கூறுகையில், மகிந்த ராஜபக்ச திங்கட்கிழமை பதவி விலகக் கூடும். அப்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அரசு அமைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அழைப்பு விடுப்பார். தற்போதைய நிலையில் எதிர்க்கட்சிகள் அரசு ஒன்றை அமைக்கத் தயாராக இல்லை. இந்த சூழலில் அனைத்து கட்சிகளைக் கொண்ட அரசு ஒன்றை அமைக்குமாறு அனைத்து கட்சிகளையும் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே அழைப்பார் என்கின்றனர்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications