இலங்கையில் உச்சக்கட்ட குழப்பம்! பதவியேற்ற 24 மணி நேரத்தில்.. புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை நாட்டில் அரசியல் குழப்பம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இலங்கையின் புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பல்வேறு காரணங்களால் அண்டை நாடான இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், அந்நாட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை

இலங்கை

கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் இன்னும் மேம்படவில்லை. இதனால் இலங்கையில் உணவு பற்றாக்குறை எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவையும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். டீசல் ஏற்றுமதி குறைந்துள்ளதால் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் பல மணி நேரம் மின்வெட்டும் ஏற்பட்டுள்ளது. இதனால் கொந்தளிப்பில் உள்ள இலங்கை மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

புதிய இடைக்கால அமைச்சர்கள்

புதிய இடைக்கால அமைச்சர்கள்

இதனால் இலங்கையில் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் இலங்கையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அனைத்து கட்சிகளைக் கொண்ட அரசை உருவாக்க அதிபர் கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்திருந்தார். இந்தச் சூழலில் புதிய இடைக்கால அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

புதிய அமைச்சரவை

புதிய அமைச்சரவை

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சரவையில் நிதி அமைச்சராக அலி சப்ரி, கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தன பதவியேற்றுக் கொண்டனர். அதேபோல வெளியுறவுத் துறை அமைச்சராக ஜி.எல், பெய்ரிஸ், நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பெர்னாண்டோ பதவி ஏற்றுக்கொண்டார்.

ராஜினாமா

ராஜினாமா

இந்நிலையில் பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் நிதி அமைச்சர் பொறுப்பை அலி சப்ரி ராஜினாமா செய்தார். தற்போதைய சூழ்நிலை குறித்து நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இந்த நெருக்கடியைத் தீர்க்க தகுந்த நடவடிக்கையை அதிபர் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இலங்கையில் ஆளும் மகிந்தா ராஜபக்ச அரசுக்கான ஆதரவைக் கூட்டணிக் கட்சிகள் விலக்கிக் கொண்டு வரும் நிலையில், ராஜபக்ச அரசு பெரும்பான்மை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+