கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்.. ஏப்ரல் 25ம் தேதி தேர்தல்.. அதிபர் அதிரடி
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தை அதிரடியாக கலைத்து உத்தரவிட்டார், அதிபர் கோத்தபாய ராஜபக்சே.
இலங்கையில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை கோத்தபாய நியமித்தார்.

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் மார்ச் 1ம் தேதியுடன் நான்கரை ஆண்டுகள் நிறைவடைகிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கலைக்க நாடாளுமன்றத்தில் மூன்றில் 2 பங்கு எம்.பி.க்கள் ஆதரவு வேண்டும் அல்லது நான்கரை ஆண்டுகள் முடிந்த நிலையில்தான் கலைக்கப்பட முடியும்.
இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போதுமான ஆதரவை தரவில்லை. இந்நிலையில் நேற்றுடன் பதவி காலம் நான்கரை ஆண்டுகள் நிறைவடைவதால் இன்று, நள்ளிரவில் நாடாளுமன்றம் கலைக்கப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதன்படி இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணியளவில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பொதுத் தேர்தல் ஏப்ரல் 25ம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல்கள் துவங்கும்.
இலங்கையில் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ந் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெற்றது. அப்போது பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வானார்.
இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சே போட்டியிடக் கூடும் என்று கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications